பெரும்பாலான ஏ.டி.எம் மெஷின்களில் திரைக்கு மேல் ஒரு வட்ட வடிவிலான கண்ணாடி ஒன்று இடம் பெற்றிருக்கும். அது பணம் எடுப்பவரின் உதவிக்காக அமைக்கப்பட்ட ஒன்றாகும். அது அகலமாக பின்னாடி இருப்பதை உங்களுக்கு காட்டும் வகையில் இருக்கும்.இதன் மூலம், நீங்கள் ரகசிய குறியீடு எண் பதிவு செய்யும் போது யாராவது உங்களை பின்னாடி இருந்து வேவு பார்க்கிறார்களா, திருடர்கள் உள்ளே வருகிறார்களா? போன்றவற்றை நீங்கள் பார்த்துக் கொள்ள முடியும்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
சூரிய மண்டலம் உருவானபோது ஏற்பட்ட மோதலில் பல சிறுகோள்கள் பெரும் கோள்களிலிருந்து பிரிந்து உருவாகின. அப்படி உருவான ஒரு சிறிய கோளை அன்னிபாலே டி காஸ்பரிஸ் எனும் இத்தாலிய வானியலாளர் மார்ச் 17, 1852இல் கண்டு பிடித்தார். இதன் சிறப்பு என்ன தெரியுமா, இது தங்கம் உள்ளிட்ட அரிய வகை உலோகங்கள், தனிமங்களால் உருவான மிகப் பெரிய கோளாகும். எனவே இதற்கு 'கோல்டுமைன் ஆஸ்டிராய்டு' என நாசா பெயரிட்டது. உண்மையிலேயே விண்வெளியில் மிதக்கும் ஒரு தங்கச் சுரங்கமான இது, நமது சூரிய மண்டல சுற்றுவட்டப் பாதையில் தான் சுற்றி வருகிறது. இந்தச் சிறுகோளில் இருக்கும் தங்கத்தின் மதிப்பு மட்டும் இந்திய ரூபாய் மதிப்பில் 750 கோடிக்கு மேல் என்று நாசா மதிப்பிட்டுள்ளது. பல விலைமதிப்பற்ற உலோகங்கள், தனிமங்கள் நிறைந்திருப்பதால் அதன் ஒரு சிறு துண்டுகூடப் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புடையதாக இருக்கும் என்று நாசா கூறுகிறது. இந்த விண்வெளி தங்கச் சுரங்கம் பூமியிலிருந்து சுமார் 32 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. தற்போது செவ்வாய், வியாழன் ஆகிய கோள்களின் சுற்றுப்பாதைகளுக்கு இடையில் சுழன்றி வருகிறது.
நாடு முழுவதும் நவராத்திரி கொண்டாட்டம் களை கட்டத் தொடங்கியுள்ளது. நவராத்திரி அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் நாடு முழுவதும் அம்மனுக்கான விசேச பூஜைகள், விழாக்கள் நடைபெற்று வருகின்றன. இதில் தெலங்கானாவில் உள்ள மெகபூப்நகரில் அமைந்துள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சிறப்பு வைபவங்கள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அங்குள்ள ஆரிய வைசிய சங்கத்தினர் சார்பில் அம்மனுக்கு ரூ. 44444444.44 (4 கோடியே 4 லட்சத்து 44 ஆயிரத்து 444 ரூபாய் 44 காசுகள்) மதிப்பிலான பணமாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டன. அதிலும் குறிப்பாக 500,100,20 ரூபாய் பணத்தாள்கள் மட்டுமே அதில் பயன்படுத்தப்பட்டிருந்தன. தற்போது அந்த படம் நெட்டில் வைரலாகி வருகிறது.
சுவிட்சர்லாந்தின் ஷூரிச் நகரை சேர்ந்தவர் டிம்ஸ்டெய்னர், இவர் பலவிதமான பச்சை குத்திக் கொண்ட தனது முதுகு தோலை 2008-ம் ஆண்டில் ஜெர்மனி கண்காட்சி அமைப்பாளர் ஒருவரிடம் விற்பனை செய்து விட்டார். தற்போது கண்காட்சிகளில் தன்னை காட்சி பொருளாக்கி வரும் அவர், மறைவுக்கு பின்னும் அவருடைய தோல் நிரந்தரமான காட்சி பொருளாக உள்ளதாம்.
340 ஹெக்டேரில் பரவியுள்ள செரபியம் காடுகள் எகிப்து தலைநகர் கெய்ரோவில் பாலைவனத்தின் நடுவே அமைந்துள்ளது. நகரங்களில் இருக்கும் கழிவு நீரை, சுத்திகரித்து குழாய்கள் மூலம் இங்கு அனுப்பி மரங்களை வளர்த்துள்ளனர். இங்கு பெறப்படும் காய், கனிகள் நூறு சதவீதம் பாதுகாப்பானவை. கழிவு நீரில் இருக்கும் சத்துக்களும், சூரிய ஒளியும், இங்கு மரங்களை வேகமாக வளர வைக்கின்றன.
உலகிலேயே முதன்முறையாக தற்கொலை செய்து கொள்ள விரும்புபவர்கள் வலியின்றி தற்கொலை செய்து கொள்வதற்கு ஏற்ற இயந்திரத்துக்கு ஒரு நாடு அனுமதி அளித்துள்ளது. பெரும்பாலான நாடுகளில் தற்கொலை முயற்சி என்பது சட்ட விரோதம். மேலும் இயற்கை மற்றும் கடவுளால் அளித்த உயிரை பறிக்க யாருக்கும் உரிமை இல்லை என்ற கருத்தும் உலகம் முழுக்க ஆழமாக வேரூன்றி உள்ளது. இதன் காரணமாகவே இன்றைக்கும் உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான நாடுகள் மரண தண்டனை அளிக்கும் சட்டத்தை மூட்டை கட்டி வீசி விட்டுள்ளன. இந்த சூழலில்தான் சுவிட்சர்லாந்து அரசு இந்த யந்திரத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி அளித்துள்ளது. இவ்வாறு அனுமதி அளித்துள்ள 5 ஐரோப்பிய நாடு சுவிஸ் என்பது கவனிக்கத்தக்கது.தற்போது உலகம் முழுவதும் மனித உரிமை ஆர்வலர்களின் ஹாட் டாப்பிக்காக இது மாறியுள்ளது. சாக்ரோ என பெயரிடப்பட்டுள்ள இந்த இயந்திரம் தற்கொலை செய்து கொள்ள விரும்புபவர்களை வலியின்றி சொர்க்கத்துக்கு பார்சல் செய்து விடும். இதன் மூலம் உடலுக்கு செல்லும் ஆக்சிஸன் குறைந்து, ரத்தத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு அளவு குறைந்து கண்ணிமைக்கும் நேரத்தில் மரணம் ஏற்படும் எனச் சொல்லப்படுகிறது. கேட்கவே திகிலாக இருக்கும் இந்த எந்திரத்துக்கு அனுமதி அளித்த சுவிஸ் அரசுக்கு எதிராக ஒருபுறம் கண்டனங்களும் எழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


