முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

உலகை ஆளும் ரோபோ

சீனா, மனிதர்களை போன்ற உருவம் கொண்ட ரோபோவை தயாரித்து அதை செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. இந்த மனித ரோபோ பெண் வடிவில் உள்ளதால் இதற்கு 'ஜியா ஜியா' என பெயரிடப்பட்டுள்ளது. இது மனிதர்கள் போலவே முகபாவனைகளை மாற்றும் திறன் கொண்டது. இதற்கு செயற்கை அறிவுத்திறன் வழங்கப்பட்டுள்ளது.ஜியா ஜியா- வை சீனாவில் உள்ள ரெஸ்டாரன்ட்டுகள், நர்சிங் ஹோம், மருத்துவமனை வேலைகளுக்கும் வீட்டு வேலைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். கணிதம், அறிவியல் போன்ற பாடங்கள் கற்பிக்கப்பட்டுள்ள இந்த ரோபோ, கேள்விகளுக்கு, ஏற்ப பதிலளிக்கும். சொன்ன வேலைகளை துரிதமாக செய்யுமாம்.

நட்சத்திரம் அருகில்

இந்த மாதம் முதல் வாரத்தில் C/2016 U1 NEOWISE எனப் பெயரிடப்பட்டுள்ள வால் நட்சத்திரம் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் என விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். NEOWISE என்ற தொலைநோக்கியின் மூலம் இந்த வால் நட்சத்திரம் கண்டறியப்பட்டுள்ளது. பூமிக்கு மிக அருகில் உள்ள கோளான புதன் வழியாக கடந்து செல்லும் இந்த வால் நட்சத்திரத்தால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆச்சரியம் ஆனால் உண்மை

பிரிட்டனில் ஒரு ஆண், கருவை சுமந்து குழந்தையை பெற்றெடுக்க தயாராகி வருகிறார்.  உலகம் உருவான நாள் முதல் குழந்தைக்கு தந்தை என ஆண் இருந்து வருகிறார். குழந்தையை கருவில் சுமக்கும் பெண்ணே தாயாக இருந்து வருகிறார். இந்த நிகழ்வை மாற்றும் விதமாக  இந்த பிரிட்டனில் ஆண் ஒருவர், கருவை தனது வயிற்றில் சுமந்து குழந்தை பெற முடிவு செய்துள்ளார். இவர்  கடந்த 3 ஆண்டுகளாக சட்ட பூர்வமாக ஆணாக வாழ்ந்து வருகிறார். இவர்  பெண் பாலினத்தில் இருந்து ஆண் பாலினமாக மாறும் ஹார்மோன் சிகிச்சை மேற்கொண்டவர். இவர் தனது வயிற்றில் கருவை சுமந்து குழந்தை பெறும் போது குழந்தையை தனது வயிற்றில் சுமந்து பெற்றெடுத்த முதல் பிரிட்டன் ஆண் என்ற சாதனையை படைப்பார்.

உலகில் 100 மில்லியன் ஆண்டுகள் பழமையான பூ மீண்டும் தோன்றியது

சுமார் 100 மில்லியன் ஆண்டுகள் பழமையான பூ ஒன்று மீண்டும் 2020 ஆம் ஆண்டில் தன்னை இந்த பூமிக்கு வெளிப்படுத்திக் காட்டியுள்ளது. அதன் பெயர் Valviloculus pleristaminis என்பதாகும். ஆஸ்திரேலியாவின் மென்மையான தோற்றமுடைய பிளாக்ஹார்ட் சஸ்ஸாஃப்ராஸ் மலருடன் தொடர்புடையது. இது ஒரு கண்ட திட்டிலிருந்து மற்றொரு கண்ட திட்டுக்கு இடம் மாற்றமாகியுள்ளது.  ஆஸ்திரேலியாவிலிருந்து 4000 தொலைவில் உள்ள தென்கிழக்கு ஆசிய பகுதியான மியான்மரின் இந்த மலர் கண்டு பிடிக்கப்பட்டது. இதன் விட்டம் 2 மிமீ. இதன் மையத்தில் சுமார் 50 மகரந்த மொட்டுகள் சுழல் வடிவில் அமைந்திருக்கும்.  இவை கண்டம் தாண்டி சென்றது ஆச்சரியம் தானே..

அழிவின் விளிம்பில் இந்திய ஓநாய்கள்

அழிந்து வரும் உயிரினங்களில் பட்டியலில் தற்போது இந்திய ஓநாய்களும் இடம் பெற்றுள்ளன. முன்பு நம்பப்பட்டு வந்ததை காட்டிலும் சற்று விரைவாகவே அவற்றின் எண்ணிக்கை சரிவடைந்து வருவதாக ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். பரிணாம வரலாற்றில் மிகவும் முந்தையதாக இந்திய ஓநாய்கள் கணிக்கப்பட்டுள்ளன. இந்திய ஓநாய்கள் எனப்படுபவை இந்தியா, பாகிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் போன்ற பிராந்தியங்களில் காணக் கூடியவை. தற்போது பாகிஸ்தானில் அவை குறித்த கணக்கெடுப்புகள் எதுவும் இல்லை. தற்போது இந்தியாவில் அவற்றின் எண்ணிக்கை 2 ஆயிரத்திலிருந்து 3 ஆயிரம் வரை இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய இந்திய புலிகளின் நிலையைப் போலவே ஓநாய்களின் நிலைமையும் உள்ளது. அமெரிக்காவில் இதே போன்று அழியும் நிலையில் இருந்த சிவப்பு ஓநாய்கள் தற்போது ஓரளவுக்கு மீட்கப்பட்டதை போல, இந்தியா மற்றும் பாகிஸ்தானை வாழ்விடங்களாக கொண்ட இந்திய ஓநாய்களை காக்க வேண்டும் என்பதே ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

சூடுபடுத்தி சாப்பிட்டால் ஆபத்து

நாம் தற்போது, உணவு பொருட்களை ஃப்ரிட்ஜில் வைத்து, அதை விரும்பும்போது மீண்டும் மைக்ரோவேவ் அவனிலோ, அடுப்பிலோ வைத்து சூடுபடுத்திச் சாப்பிடுவது வழக்கமாக கொண்டுள்ளோம்.  `உணவுகளை இப்படிச் சூடுபடுத்திச் சாப்பிடுவதால், அதிலுள்ள சத்துகள் குறைந்துபோய்விடும். அதுவே உடல் ஆரோக்யத்துக்குக் கேடு விளைவிக்கக் கூடியதாக மாறிவிடும்’ என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். மேலும், `இது ஃபுட் பாய்ஸனிங் தொடங்கி இதய நோய், புற்றுநோய் போன்ற பெரிய நோய்கள் வரை வழிவகுத்து, உயிருக்கே உலைவைத்துவிடும்’ என்றும் எச்சரிக்கிறார்கள். கோழி இறைச்சி, கீரை உணவு வகைககள்,  முட்டை, காளான் உணவுகள், உருளைக்கிழங்கு, சமையல் எண்ணெய், பீட்ரூட் உணவு போன்றவைகள் சூடுபடுத்தி உண்ணக்கூடாத உணவு வகைகள் ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago