முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

சஹாராவில் மக்கள்

உலகின் மிகவும் வறண்ட நிலமான பாலைவன பூமி சஹாரா. உலகில் சஹாரா பாலைவனம் மூன்றாவது மிகப் பெரிய பாலைவனம் ஆகும். இதன் பரப்பளவு 9,200,000 சதுர கிலோமீட்டர்கள். கடந்த 100 ஆண்டுகளில் சஹாரா பாலைவனம் 10% வளர்ச்சியடைந்துள்ளதாக விஞ்ஞானிகள் கணிக்கின்றனர். சஹாராவில் மக்கள் வாழ்கிறார்கள் தெரியுமா? சுமார் 2.5 மில்லியன் மக்கள் சஹாராவை தங்கள் வீடு என்று அழைக்கிறார்கள். இவர்கள் இங்கு நாடோடிகளாக வாழ்கின்றனர். ஒட்டகங்களுடன் பயணம் செய்யும் பெடோயின் நாடோடி மக்கள் வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கைச் சுற்றிலும் பாலைவனத்தைச் சுற்றி நகர்கிறார்கள். பருவ மாற்றம் மற்றும் அவர்களின் தேவைகளைப் பொறுத்து இயற்கை வளங்களுக்கு அருகில் கூடாரங்கள் அடித்து முகாம்களை உருவாக்குகிறார்கள். சஹாரா வறண்டது என்ற போதிலும் இரவில் வெப்பநிலை வியக்கும் அளவில் குறைகிறது. வெப்பநிலை -6 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறையும். பல மலைத்தொடர்களில் பனி தவறாமல் விழுகிறது. சஹாரா பாலைவனத்தில் மொத்தம் 20 ஏரிகள் உள்ளன. சஹாராவில் உள்ள ஒரே நன்னீர் ஏரி சாட் ஏரி. இங்கு 1960கள் வரையிலும் கூட சிங்கங்கள் வாழ்ந்தன. அவை பாலைவனத்தின் வறட்சியால் அழியவில்லை. மனிதர்களின் வேட்டையினாலேயே அவை முற்றிலும் அழிந்து போயின என்பது மிகுந்த சோகம்தானே.

கூகுல் ஆப்

புதிய முறையில் புகைப்படம் எடுக்க ஆண்ட்ராய்டு ஃபோன்களுக்காக கூகுல் புதிய ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆப் மூலம் நகரக்கூடிய புகைப்படங்களை எடுக்க முடியும். இந்த ஆப் மூலம் நகரும் புகைப்படத்தை ஜிஃப் ஃபைல் மற்றும் அனிமேடட் புகைப்படங்களை எடுத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

தெரிந்தும் தெரியாதது

சராசரியாக ஓர் ஆண் சிங்கம் 250 கிலோ வரை இருக்குமாம். இதன் கர்ஜிக்கும் சப்தம், 8 கி.மீ வரை எதிரொலிக்கும். காட்டில் வாழும் ஆண் சிங்கம் பத்தில் இருந்து பதினான்கு ஆண்டுகள் வரை உயிர் வாழும். பெண் சிங்கங்களுக்கு பிடரிமயிர் அதிகமாக இருக்கும். பூனை குடும்பத்தில் புலிக்கு அடுத்து 2-வது பெரிய விலங்கு சிங்கம்.

கதிர்வீச்சு அபாயம்

செவ்வாய் கிரகத்தில் வரும் 2039-ம் ஆண்டுக்குள் விண்வெளி ஆராய்ச்சி வீரர்களை தரையிறங்க வைக்க முடியும் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்தை நீண்ட நாட்களாகவே அதிக முன்னுரிமை பட்டியலில் வைத்துள்ளது நாசா. ஆய்வுகள் தொடர்ந்துவரும் நிலையில் தற்போது அதிர்ச்சி தகவலாக, முன்னர் எண்ணியதை விடவும் செவ்வாய் கிரகத்திற்கு செல்லும்போது புற்றுநோய் தாக்குவதற்கான சாத்தியம் இரு மடங்கு காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. மாதிரி அமைப்பு ஒன்றினை வைத்து மேற்கொண்ட ஆய்விலேயே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரதான காரணமாக அண்டவெளியிலுள்ள கதிர் வீச்சுக்கள் நேரடியாக செவ்வாய் கிரகத்தினை சென்றடைவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Hiccups, விக்கல்

ஒரு 30 வினாடிகள்... இரு காது துவாரங்களையும் விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...  நின்று போகும் தீராத விக்கல்! ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு, சர்க்கரையை வாயில் போட்டு சுவையுங்கள்.. பறந்து போகும் விக்கல்!

ஆண்களுக்கும் உண்டு

பெண்களுக்கு மட்டும் தான் மெனோபாஸ் என்னும் இறுதி மாதவிடாய் உள்ளது என்று நினைக்கிறார்கள். ஆண்களுக்கும் இம்மாதிரியான நிலை ஏற்படும். அதை ஆன்ட்ரோபாஸ் என்று சொல்வார்கள். இந்நிலையின் போது ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாக இருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago