உலகில் ‘செல்பி’ எடுக்கும்போது இறந்தவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஆபத்தான இடங்களில் ‘செல்பி’ எடுக்கும் பழக்கத்தினால், இந்தியாவில் 76 பேர் மரணமடைந்துள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த கார்நிகி மெலன் பல்கலைக்கழக ஆய்வு குழு தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் பலர் இளம் வயதினர்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
சிறுவர்களுக்கு உடல்நலக்குறைவுகள் ஏற்படும் போது, ஒரு சிலருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அவ்வாறு அறுவை சிகிச்சைக்கு முன் குழந்தைகளை இயல்பான மனநிலையில் இருக்கச் செய்ய அமெரிக்காவில் உள்ள சான் டியாகோ மருத்துவமனை சிறாரே ரிமோட் கண்ட்ரோல் காரில் செல்லும் வகையிலான புதிய வசதியை உருவாக்கி உள்ளனர். இதனால் சிறார் மற்றும் பெற்றோருடைய பதற்றம் தணிகிறதாம்.
குழந்தைகள் காது பிரச்சனையால் அடிக்கடி அவஸ்தைப்படுவார்கள். காதுகளில் ஏற்படும் தொற்றுகளுக்கு பூண்டு சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இதில் ஆன்டி-மைக்ரோபியல் தன்மைகள் ஏராளமாக உள்ளது. இந்த பூண்டு சாற்றினை குழந்தைகளின் காதுகளில் 2 துளி விட்டால் வலி குறைந்து நிவாரணம் கிடைக்கும்.
மின் ஆற்றலைப் பெறுவதற்கான புதிய வழிமுறைகள் பற்றித் தொடர்ந்து எப்போதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டே வருகின்றன. சூரியனிடமிருந்து ஏராளமான மின் ஆற்றலைப் பெற இயலும் என்றாலும், தற்போது அந்த மின் ஆற்றலின் மிகக் குறைந்த அளவையே நாம் பயன்படுத்தி வருகிறோம். சூரிய மின் ஆற்றலின் ஒரு சிறு பகுதியைக் கொண்டே உலகின் மின் ஆற்றல் தேவையைப் பெருமளவு நிறைவு செய்ய இயலும். முதலாவது சூரிய மின் ஆற்றல் நிலையம் (solar energy station) ஒடெய்லோ (Odeillo) என்ற இடத்தில் 1969ஆம் ஆண்டு ஃபிரான்சில் நிறுவப்பட்டது. மின் ஆற்றலைப் பெறுவதற்கு சூரிய ஒளியின் திறனைப் பயன்படுத்தியதோடு, எவ்வளவு மின் ஆற்றலைப் பெற முடியுமோ அவ்வளவு மின் ஆற்றலைப் பெறுவதற்குத் தேவையான எண்ணிக்கையில் பல சோலார் பேனல்களும் பயன்படுத்தப்பட்டன. எதிர்காலம் சூரிய ஒளி மின் ஆற்றலையே நம்பியுள்ளது என்றால் இன்றைக்கு யார் நம்ப போகிறார்கள்.
ஐம்பது கிராம் கொல்லையும், ஐம்பது கிராம் புளியும், 300 மில்லி அளவு வெந்நீரில் இரவில் ஊறவைக்க வேண்டும். காலையில் கொதிக்க வைத்து 100 மில்லியாக வற்றச்செய்யவேண்டும். வற்றியதும் வடிகட்டி சிறிது சுக்கு, மரமஞ்சள் பொடிகளைச் சேர்க்க வேண்டும். அத்துடன் தேன் கலந்து வெறும் வயிற்றில் பருகினால் பசி தூண்டப்படும், செரிமானம் அதிகரிக்கும்.
ரஷ்ய வரலாற்றிலேயே அதிக மதிப்புள்ள வைரம் ஒன்று ஏலத்துக்கு வந்திருக்கிறது. இதன் எடை 51 கேரட். இவை அனைத்தும் ஜார் மன்னர்கள் சேகரித்து வைத்தவை. இவை சுமார் 300 ஆண்டுகள் வரை பழமையானவையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதனை ஏலம் எடுக்க செல்வந்தர்கள் முண்டியடிப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


