Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

உப்புநீர் ஏரி

ரஷ்யா, ஈரான், துர்க்மெனிஸ்தான், அசர்பைஜான் மற்றும் கசகஸ்தான் ஆகிய நாடுகளைத் தனது எல்லைகளாகக் கொண்ட காஸ்பியன் ஏரி 3 லட்சத்து 17 ஆயிரம் சதுர கி.மீ பரப்பளவும், 78,200 கன கி.மீ கொள்ளளவும் கொண்டது. ஏறத்தாழ 120 நதிகள் காஸ்ப்பியனை நோக்கி பாய்கின்றன. இதில் வோல்கா நதிதான் மிகப் பெரியது.

ஹாலிவுட் சினிமாக்களில் கழிவறை

இன்றைய ஹாலிவுட் படமானாலும் சரி, வெளிநாட்டு படமானாலும் ஒரு சீன்லயாவது கழிவறை இடம் பெறாமல் போவதில்லை. ஆனால் 1960கள் வரையிலும் அமெரிக்க ஹாலிவுட் படங்களில் கழிவறையே இடம் பெற்றதில்லை. முதன்முதலாக முக்கிய பாத்திரம் ஒருவர் கழிவறையில் காகிதத்தை கசக்கி எறிந்து, தண்ணீரை திறந்து விடுவதை போன்ற காட்சியை சைக்கோ திரைப்படத்தில் ஹிட்ச்காக் அமைத்திருப்பார். அதன் பிறகே ஹாலிவுட் படங்களில், கழிவறை, குளிலறை, ஷவர் போன்றவை இடம் பெற்றன என்றால் ஆச்சரியம் தானே..

நீண்ட சேவை

சீனா, தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு நேரடி சரக்கு ரயிலை அறிமுகம் செய்துள்ளது. சீனாவின் ஸெஜியாங் மாகாணத்தில் உள்ள யுவூ நகரிலிருந்து லண்டன் மாநகருக்கு இந்த சரக்கு ரயில் சேவை துவங்கப்பட்டு இருக்கிறது.இதன்மூலம், கஜகஸ்தான், ரஷ்யா, பெலாரஸ், போலந்து, ஜெர்மனி, பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய பல தேசங்களை கடந்து லண்டன் மாநகரை அந்த ரயில் அடையும். யுவூ மற்றும் லண்டன் நகரங்களுக்கு இடையிலான கிட்டத்தட்ட 12,000 கிமீ தூரத்தை 18 நாட்களில் கடக்க இருக்கிறது இந்த சரக்கு ரயில்.

நாசாவின் ரோவரை தரையிறங்க செய்த இந்திய பெண் சுவாதி

செவ்வாயில் உயிரினங்கள் வாழ்ந்ததா என்பது குறித்து ஆராய நாசா அனுப்பிய பெர்சிவரன்ஸ் ரோவர் வெற்றிகரமாக தரையிறங்கியது. அங்கிருந்து தண்ணீரின் வழித்தடங்களை படமெடுத்து உலகை வியப்பில் ஆழ்த்தியது. அதெல்லாம் சரி.. அதை விட முக்கியம் அதை தரையிறங்க செய்த குழுவின் தலைவர் யார் தெரியுமா.. சுவாதி மோகன் என்ற இளம் பெண். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான இவரது பெற்றொர் பெங்களுரைச் சேர்ந்தவர்கள்.சிறு வயதிலேயே பெற்றோர் அவரது அமெரிக்கா வந்துவிட்டனர். சுவாமி தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை வடக்கு வெர்ஜீனியா-வாஷிங்டன் மெட்ரோ பகுதியில்தான் கழித்தார். கார்னெல் பல்கலைக்கழகத்தில் இயந்திர மற்றும் விண்வெளி பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார் ஏரோநாட்டிக்ஸ் / வானியல் துறையில் எம்ஐடியிலிருந்து எம்.எஸ் மற்றும் பி.எச்.டி படிப்பை முடித்தபோது அவருக்கான பரந்த உலகம் திறந்திருந்தது. நாசாவில் பணிக்கு சேர்ந்தது முதலே ஏற்றம்தான். அங்கு படிப்படியாக விரைவாக முன்னேறி பெர்சிவரன்ஸ் ரோவர் தரையிறங்கும் குழுவின் தலைமை பொறுப்புக்கு வந்தார். வெற்றிகரமாக சாதித்தும் காட்டியுள்ளார். இதற்கெல்லாம் உந்துதலாக இருந்தது எது என்று கேட்டால், சிறுவயதில் தான் பார்த்த சயின்ஸ் பிக்சன் தொடரான ஸ்டார் டிரக்தான் என்கிறார் சிரித்தபடி. ஹேட்ஸ் ஆப் சுவாதி.

ஸ்குவாட்ஸ் பயிற்சி

ஸ்குவாட்ஸ் பயிற்சியைச் செய்வதால், முழு உடலுக்கும் வலு கூடுகிறது. கொழுப்பைக் குறைத்து தொடை, பின்புறம் மற்றும் வயிற்றுப் பகுதிகளை உறுதியாக்குகிறது.தொடை வலுவாக இருந்தால்தான் உடலைத் தாங்கிப்பிடிக்க முடியும். இந்தப் பயிற்சி செய்வதன் மூலம் தொடைப் பகுதி நன்றாக வலுப்படும்.

ரத்த நிறத்தில் அருவி அண்டார்டிகாவில் ஓர் அதிசயம்

பெரும்பாலும் அருவி நீர் நிறமற்ற வேகத்தில் கொட்டும். சற்று அடர்த்தியாகவும், வேகமாகவும் பாய்கிற போது அதன் குமிழிகள் பொங்குவதால் வெள்ளை நிறத்தில் இருப்பதை நம்மால் காண முடியும். உலகம் முழுவதுமே அருவிகள் வெள்ளை நிறத்திலேயே பொங்கி பிரவகிக்கின்றன. ஆனால் ஒரே ஒரு இடத்தை தவிர. அது கிழக்கு அண்டார்டிகாவில் உள்ள விக்டோரியா நிலம் எனப்படும் McMurdo Dry Valleys என்ற பள்ளத்தாக்கில்தான் அருவி ரத்த நிறத்தில் பாய்ந்தோடுகிறது. இந்த ரத்த நதி டெய்லர் பனிப்பாறையின் நாக்கு போன்ற பகுதியிலிருந்து டெய்லர் பள்ளத்தாக்கில் உள்ள வெஸ்ட் லேக் போனியின் பனி மூடிய மேற்பரப்பில் பாய்கிறது. ஏன் சிவப்பாக, ரத்த நிறத்தில் உள்ளது. பல லட்சம் ஆண்டுகளாக இப்பகுதியில் உள்ள பூமியில் உள்ள இரும்பு ஆக்சைடு இந்த நீர் பரப்பில் கலந்து வருவதால் சிவப்பு நிறத்தில பாய்கிறது பனிக்காலங்களில் சிவப்பு நிற பனிப்பாளங்களாக உறைந்து கிடப்பதை பார்க்க பேரதிசயமாக விளங்குகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago