மொபைல் போன் வைத்திருப்பவர்களின் கவலை பெரும்பாலும் சட்டென்று கரைந்துவிடக் கூடிய பேட்டரி சார்ஜ்தான். தற்போது வெளியூர் பயணங்களின் போது பலரும் பவர் பேங்க் வைத்திருப்பதை பார்க்க முடியும். ஆனால் மொபைலை சார்ஜ் செய்வதாக இருந்தாலும், பவர் பேங்கை சார்ஜ் செய்வதாக இருந்தாலும் அதற்கான மின் இணைப்பை தேட வேண்டியது அவசியமாகும். மின் இணைப்பு கிடைக்காத வெட்ட வெளியில் இருக்க நேர்ந்தால், மொபைல் பேட்டரி சார்ஜ் டவுண் ஆகி விட்டால்.. மிகவும் கஷ்டம்தான். இதனால் நமது மனமும் டவுனாகி விடும். இனி அந்த கஷ்டம் வேண்டாம். மொபலை சார்ஜ் செய்ய தற்போது சோலார் மொபைல் சார்ஜர் வந்து விட்டது. இதற்கு சிறிய அளவு வெளிச்சம் போதும். அதை அப்படியே நமது மொபைலில் இணைத்து விட்டால்... நாள் முழுவதும் பேட்டரி டவுன் ஆகாமல் ஜாலியாக அரட்டை கச்சேரியை தொடரலாம்.. இதன் விலையும் சுமார் ரூ.300 லிருந்து தொடங்கி பல்வேறு ரகங்களில் ஆன் லைன் ஸ்டோர்களில் கிடைக்கிறது. இனி வாங்கி உங்களது நண்பிகள், நண்பர்களை அசத்துங்கள்..
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
இத்தாலியில் உள்ள சுமார் 1765 பேர் வசிக்கும் சிற்றூர் ஒன்றில் 10 க்கும் மேற்பட்டோர் தங்களது 100 ஆவது பிறந்த நாளை கொண்டாட உள்ளனர். இத்தாலியில் உள்ள சர்தினியா என்ற தீவில் அமைந்துள்ள பெர்தாஸ்தேபோகு (Perdasdefogu) என்ற சிற்றூர்தான் அந்த பெருமைக்குரிய இடமாகும்.உலகில் 100 வயதுக்கு மேற்பட்டோர் அதிகம் பேர் வசிக்கும் 5 இடங்களில் சர்தினியாவும் ஒன்றாகும். ஒவ்வொரு 1 லட்சம் குடியிருப்பு வாசிகளில் சுமார் 33.6 சதவீதம் பேர் 100 வயதுக்கும் மேற்பட்டவர்களாக இருக்கின்றனர். கடந்த 2012 ஆம் ஆண்டு இந்த ஊர் கின்னஸில் இடம் பெற்றது. மெலிஸ் என்பவரின் குடும்பம் கடந்த 9 தலைமுறையாக இதே ஊரில் வசித்து வருகின்றனர் என்ற சாதனையுடன் அது கின்னஸ் சாதனை படைக்கப் பெற்றது. கன்சோலடா மெலிஸ் என்பவரின் வம்சாவளியினர்தான் இந்த ஊரின் மிகவும் மூத்த குடும்ப வம்சாவளியினர் ஆவர். அவர் தனது 105 ஆவது வயதில் கடந்த 2015 இல் காலமானார். இந்த ஊரை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், சுத்தமான காற்று, மாசில்லாத சுற்றுச்சூழல், ஆரோக்கியமான உணவு உள்ளிட்டவைதான் இங்கு வாழ்பவர்கள் அதிக ஆண்டுகள் உயிருடன் இருப்பதற்கு காரணம் என்பதை கண்டறிந்தனர். தற்போது 10க்கும் மேற்போட்டோர் இவ்வூரில் சென்சுரி அடித்துள்ளனர். கேட்கவே பொறாமையாக இருக்கு அல்லவா..
வாட்ஸ் அப் செயலியில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் தீவிரவாதிகளின் தகவல் தொடர்புக்கு உதவுவதாக தெரியவந்துள்ளது. வாட்ஸ் அப் செயலி மூலம் அனுப்பப்படும் தகவல்கள் என்க்ரிப்டட் எனப்படும் தொழில்நுட்பம் மூலம் பாதுகாக்கப்படுவதால், தகவல்களை அனுப்புவர் மற்றும் பெறுபவர் தவிர வேறு யாரும் ஹேக் செய்ய முடியாது.
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் ஒரு நாள் கண்டிப்பாக இக்ளூஸ் வீடுகளில் தான் வாழ்வார்கள். விண்வெளியின் உள்ள கதிர்வீச்சில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக, செவ்வாய் கிரகத்தின் அடியில் இருந்து எடுக்கப்படும் ஐஸ்-சை வைத்து மேற்பரப்பில் இந்த வீட்டை உருவாக்க உள்ளனர். இதனால் எதிர்காலத்தில் மக்கள் விண்வெளியில் வாழ்வதற்கு பூமியில் இருந்து பொருட்களை எடுத்து செல்லாமல், செவ்வாய் கிரகத்தின் இயற்கை வளங்களைப் பயன்படுத்தி வீடுகளை அமைத்துக்கொள்ளலாம். மேலும், இந்த வீடுகள் வேலை பார்ப்பதற்கும், பொழுதுபோக்குவதற்கும், மற்றும் உணவு தயாரிப்பதற்கும் உட்பட பலவற்றிற்கும் இது உபயோகப்படும். ஒவ்வொரு வீடுகளும் 4 பேர் தங்குவதற்கு ஏற்றதாக வடிவமைக்கப்படவுள்ளது.
தாளாசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் உடல் முழுவதும் இரத்தஓட்டம் சீரடைந்து நரம்பு மண்டலம் வலிமை பெறும். நிமிர்ந்த மிடுக்கான தோற்றம் கிடைக்கும். நுரையீரல் நெஞ்சுப்பகுதி பலம்பெறும். புத்துணர்ச்சி மிகும். மன வலிமை கூடும்.
ஆரம்பத்தில் கை குலுக்கும் நோக்கம் என்ன வென்றால் கையில் எந்த ஆயுதமும் இல்லை மற்றும் சமாதானத்தின் சைகை என்று கூறப்படுகிறது.நவீன காலத்தில், கைகுலுக்குவது வாழ்த்துக்களில் இருந்து நன்றி தெரிவிக்கும் செயல் வரை வெளிப்படுத்தும் செயலாக இருக்கிறது. நியூஜெர்ஸி முன்னாள் மேயர், ஜோசப் லாசராவ், 1977 ல், ஒரே நாளில் 11,000 கை குலுக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


