விருச்சிகாசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும். கை, கால்கள் வலிமையடையும். மூளைக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. அனைத்துச் சுரப்பிகளும் சீராக இயங்க உதவுகிறது. இதனால் கண் பார்வை கூர்மையடையும். தொடர்ந்து செய்து வந்தால் இழந்த சக்தியை மீட்க முடியும். மேலும், உடலின் சோர்வை போக்க முடியும்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
க்ராஸ்ஹெல்மெட் என்பது அடுத்ததலைமுறை மோட்டார் சைக்கிள் ஹெல்மெட் ஆகும், இது ஒலி கட்டுப்பாடு, ஜிபிஎஸ், 360˚ காட்சித்திறன் என நமது சவாரி அனுபவத்தையே முற்றிலுமாக மாற்றிவிடும். இதுவே முதல் ஒலி கட்டுப்பாட்டு செயல்பாடு, ப்ளூடூத் இணைப்பு மற்றும் ஒரு பிரத்யேக ஸ்மார்ட்போன் பயன்பாட்டைக் கொண்டு கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட நவீன ஹெல்மெட் ஆகும். பின்புறம் வரும் வாகனங்களின் காட்சி உங்கள் ஹெல்மெட்டின் முன்பகுதியில் உள்ள திரையில் தெரியும் என்பதால் திரும்பி பார்க்க வேண்டிய தேவை இருக்காது. இது மட்டுமின்றி , இந்த கிராஸ் ஹெல்மெட் ஜீபிஎஸ் வசதி உள்ளதால் நீங்கள் செல்ல விரும்பும் இடத்திற்கு சரியான பாதையை காண்பிக்கும். 360 கோணம் பார்க்க முடியும் என்பதால் நீங்கள் சாதாரணமாக பார்க்க முடியாத சாலையின் பகுதியை கூட இதன் மூலம் பார்க்க இயலும் என்பது கூடுதல் வசதி.
ஆர்பர் டே அறக்கட்டளை மற்றும் ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு இணைந்து ஆண்டுதோறும் ‘உலகின் மர நகரம்’ என்ற அங்கீகாரத்தை உலகில் உள்ள நகரங்களுக்கு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு மும்பையை “உலகின் மர நகரம் 2021” ஆக அறிவித்துள்ளது. இந்த பட்டத்தை வெல்லும் இந்தியாவின் இரண்டாவது நகரம் மும்பை ஆகும். ஏனெனில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து ஐதராபாத் ‘உலகின் மர நகரம்’ என்ற பட்டத்தை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது. இந்த அங்கீகாரத்தின் மூலம், ஆரோக்கியமான, நெகிழக்கூடிய மற்றும் மகிழ்ச்சியான நகரங்களை உருவாக்குவதில் மரங்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் ஒத்த எண்ணம் கொண்ட நகரங்களின் பட்டியலில் மும்பை இணந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனின் (பிஎம்சி) தோட்டத் துறையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புற காடுகளுக்கு மத்தியில் பசுமையை நிலைநிறுத்துவதற்காக அங்கீகரிக்கப்பட்ட 21 நாடுகளைச் சேர்ந்த 138 நகரங்களின் குழுவில் வட இந்தியாவின் தூக்க நகரமான மும்பையும் இணைக்கப்பட்டுள்ளது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஒரே சோப்பை குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்துவது சரியல்ல. ஒருவரிடம் இருக்கும் சருமப் பிரச்சனை மற்றொருவருக்குப் பரவும் வாய்ப்பு இதனால் அதிகமாகும், மேலும், இது சுகாதாரமானது கிடையாது. பி.ஹெச் அளவு 5.5 இருக்கிற சோப்பாகத் தேர்ந்தெடுப்பது நல்லது.
வரும் 2018- ம் ஆண்டில் நடைபெற உள்ள விண்வெளி பயணத் திட்டத்தின் கீழு் பங்கேற்கவுள்ள நபர்களில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான ஷாவ்னா பாண்டியா உள்ளதாக நாசா அறிவித்துள்ளது. இதன் மூலம் கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்சை தொடர்ந்து, விண்வெளி செல்லும் 3-வது இந்திய வம்சாவழி பெண் இவர்.
முதல் தலைமுறை கண்ணாடிகள் எதனால் செய்யப்பட்டவை தெரியுமா... முதலில் கலனில் நிரப்பிய நீரால் முகம் பார்த்த மனிதன் பின்னர் கிமு 6 ஆயிரம் வாக்கில் நன்றாக பளபளப்பூட்டப்பட்ட எரிமலை குழம்பு உறைந்த கற்களையே முகம் பார்க்கும் கண்ணாடியாக பயன்படுத்தி வந்தான். இது பயன்பாட்டுக்கு வந்ததும் நீர் கண்ணாடி விடை பெற்றது. கல் கண்ணாடி ஆட்சி புரிந்தது. அதன் பின்னர் மெசபடோமியா பகுதிகளில் பாலீஸ் செய்யப்பட்ட செப்பு தகடுகள் கண்ணாடிகளாக பயன்படுத்திய ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


