முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

உலகின் மிகப் பெரிய காளை

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சியானினா என்ற காளை இனம் தான் தற்போது வரையிலும் உலகிலேயே வீடுகளில் வளர்க்கப்படும் காளைகளில் மிகப் பெரிய காளை இனமாக அறியப்பட்டுள்ளது. உயரத்திலும் எடையிலும் இவை மெகா சைஸ். தொடக்கத்தில் இவை இத்தாலியில் வளர்க்கப்பட்டன. பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு பரவின. இவற்றின் எடை சுமார் 1700 கிலோ. தொடக்கத்தில் இறைச்சிக்காக இவை வளர்க்கப்பட்டன. 2 ஆம் உலகப் போருக்கு பிறகு இது உலகம் முழுவதும் பரவலான இனமாக மாறியது. பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன.

பயத்தை போக்க...

துபாயில் ‘டெடிபியர்’ பொம்மைக்கு சிகிச்சை அளிக்க தனி மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. உடல் நலக் குறைவால் அவதிப்படும் குழந்தைகள் மற்றும் சிறுவர், சிறுமிகள் ஆஸ்பத்திரிக்கு வந்து டாக்டர்களிடம் சிகிச்சை மேற்கொள்ள அச்சப்படுகின்றனர். அவர்களின் பயத்தை போக்க பொம்மைகளுக்கு சிகிச்சை அளிக்கும் புதுமையான திட்டம் ஒன்றை துபாய் அரசு நடைமுறைபடுத்தியுள்ளது.

மனிதர்களை போல...

குரங்களால் மனிதர்களைப் போல பேசவும், சிரிக்கவும் முடியாது. ஆனால், மக்காகிவ் வகைக் குரங்குகளுக்கு மனிதர்களைப் போலவே குரல் வளை உள்ளிட்ட குரல் எழுப்பும் உறுப்புகள் இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், ஒலி சைகைகளை குரலாக மாற்றும் அளவுக்கு இவைகளுக்கு மூளை வளர்ச்சியடையவில்லையாம்.

குறட்டை விடும் பறவை எது தெரியுமா?

அலகின் நுனியில் நாசித் துவாரங்களை கொண்ட ஒரே பறவை கிவி. இது தரையில் உள்ள புழுக்கள் மற்றும் பூச்சிகள் போன்ற உணவுக்காக மோப்பம் பிடிக்க உதவுகிறது. அதன் நாசியைத் துடைக்க அடிக்கடி குறட்டை விடுகின்றது. இது ஒரு கோழி இனம். இது பல வித்தியாசமான பன்புகள் கொண்டது. இவை நியூசிலாந்து அதை சுற்றி உள்ள சிறிய நாடுகளின் காடுகளில் வாழ்கின்றன. இப் பறவை 30 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நியூசிலாந்தில் தோன்றியது. இவைகளால் பறக்க முடியாது என்பது இதன் சிறப்பம்சமாகும். நியூசிலாந்தின் தேசிய சின்னமாக கிவி இடம் பெற்றுள்ளது. தற்போது அழியும் தருவாயில் இருப்பதாக பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நம்பர் ஒன்

உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர், மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டர் நிறுவனர் பில்கேட்ஸ்.  அடுத்த 25 ஆண்டுகளில் உலகின் முதல் மாபெரும் கோடீஸ்வரராக இவர் ஆக உள்ளார். 2௦16-ம் ஆண்டில் இவரின் சொத்து மதிப்பு 75 பில்லியன் டாலர். 2009-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் பில்கேட்சின் சொத்து மதிப்பு 11% உயர்ந்து வருகிறது.

அதிசய மனிதர்

சுவிட்சர்லாந்தின் ஷூரிச் நகரை சேர்ந்தவர் டிம்ஸ்டெய்னர், இவர் பலவிதமான பச்சை குத்திக் கொண்ட தனது முதுகு தோலை 2008-ம் ஆண்டில் ஜெர்மனி கண்காட்சி அமைப்பாளர் ஒருவரிடம் விற்பனை செய்து விட்டார். தற்போது கண்காட்சிகளில் தன்னை காட்சி பொருளாக்கி வரும் அவர், மறைவுக்கு பின்னும் அவருடைய தோல் நிரந்தரமான காட்சி பொருளாக உள்ளதாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago