முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

1200 ஆண்டுகள் பழமையான மம்மி உடல் தோண்டி எடுப்பு

பெரு நாட்டில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால், 800 முதல் 1,200 ஆண்டுகள் பழமையானது என மதிப்பிடப்பட்ட மிகவும் பக்குவமாகப் பதப்படுத்தப்பட்ட ஒரு மம்மி உடல் நாட்டின் தலைநகரான லிமாவிற்கு அருகில் உள்ள இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதில் வினோதம் என்னவென்றால், இந்த மம்மி இன் உடல் முழுவதும் கயிறுகளால் இறுக்கி கட்டப்பட்டுள்ளது. அதன் முகத்தை அந்த மம்மி அதன் கைகளால் மூடியுள்ளது. இது தெற்கு பெருவியன் இறுதிச் சடங்கு முறை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.சான் மார்கோஸின் தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதை கண்டு பிடித்துள்ளனர். இது 15 ஆம் நூற்றாண்டில் பெருவின் சிறந்த அறியப்பட்ட மச்சு பிச்சு கோட்டையை நிறுவிய இன்கா நாகரிகத்திற்கு முந்தையது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஆபத்தை எதிர்நோக்கி...

அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக மயக்கவியல் துறை ஆய்வாளர்கள் 19-32 வயதுக்குட்பட்ட 2,000த்துக்கும் மேற்பட்டோரிடம் நடத்திய ஆய்வில், தினசரி 2 மணி நேரத்துக்கு மேல் ஒருவர் சமூக வலைதளங்களை பயன்படுதினால், அது அவருக்கு சமூகத்தில் இருந்து தனிமைப்படும் உணர்வை அதிகரித்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறதாம்.

பூண்டின் மருத்துவ பலன்

வறுத்த 6 பூண்டுகளை தினமும் சாப்பிட்டு வந்தால் உயர் இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால், இதய நோய்கள், மாரடைப்பு, பெருந்தமனி தடிப்பு போன்றவைகளை கட்டுப்படுத்தப்படும். பூண்டு உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புக்களை கட்டுப்படுத்தும். உடலில் ஆன்ஜியோடென்சின் II என்னும் ஹார்மோன் உற்பத்தியை தடுக்கும்.

ஹேக்கிங்கைத் தவிர்க்க...

பேஸ்புக் நிறுவனம், பயனாளர்களின் மொபைல் போனுக்கு அனுப்பப்படும் எஸ்எம்எஸ்களை ஹேக் செய்யமால் தவிர்க்க பாஸ்வேர்டுகளுடன் யுஎஸ்பி வடிவிலான திறவுகோல் பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ’செக்யூரிட்டி கீ’ என்று பெயரிடப்பட்டுள்ள இதை கணினியின் யுஎஸ்பி போர்ட் மூலம் இணைத்து உங்கள் அக்கவுண்ட்டில் லாக்இன் செய்து கொள்ளலாம்

ரூ. 714 கோடியாம்

மறைந்த ஓவியர் ஷான் மிஷெல் பாஸ்கியா வரைந்த அந்த ஓவியம், நியூயார்க்கில் பிரபல ஏல நிறுவனத்தில் விற்பனை செய்யப்பட்டது. ஒரு மண்டையோடு வடிவத்தைக் கொண்ட முகத்தை இந்த ஓவியம் சித்தரிக்கிறது. இந்த ஓவியம், 110.5 மில்லியன் டாலர் களுக்கு விற்பனையானது. இந்திய மதிப்பில் இதன் விலை சுமார் 714 கோடி ரூபாய். இதை ஜப்பானைச் சேர்ந்த தொழில்முனைவர் வாங்கியுள்ளார். ஓவியர் ஷான் மிஷெலின் முந்தைய ஓவியத்தைக் காட்டிலும் இது கிட்டத்தட்ட இருமடங்கு விலைக்கு விற்கப்பட்டிருக்கிறது. தற்போது ஓவியத்தை ஏலத்தில் எடுத்தவர்தான் ஓர் ஆண்டுக்குமுன், ஷான் மிஷெலின் அந்த ஓவியத்தையும் விலைக்கு வாங்கினார். அமெரிக்காவைச் சேர்ந்த ஓவியக் கலைஞர்கள் வரைந்து விற்பனையான படைப்புகளிலேயே இது மிகவும் அதிக விலைக்குப் போனதாம்.

ஆயிரம் லிங்கம்

கர்நாடக மாநிலத்தின் வடக்குப் பகுதியில் சீர்சி என்ற ஊரிலிருந்து சுமார் 17 கிலோமீட்டர் பயணம் செய்தால், சால்மலா ஆற்றை அடையலாம். இந்த ஆற்றுக்குள் இருக்கும் பாறைகளில் ஆயிரம் (சஹஸ்ர) லிங்கங்கள் இருக்கின்றன. ஆற்று நீரோட்டம் உள்ள பகுதிகளில்தான் இந்த அத்தனை லிங்கங்களும் உள்ளன. இந்த லிங்கங்கள் அனைத்தும் ஆவுடையாருடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒருசில லிங்கங்களுக்கு முன்பு நந்தி சிலையும் செதுக்கப்பட்டுள்ளன. இந்த ஆயிரம் லிங்கங்களும் எப்பொழுது உருவாக்கப்பட்டது? யாரால் உருவாக்கப்பட்டது? என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. இதே போல கம்போடியா நாட்டில் கபல்சியான் என்ற ஊரில் ஓடும் ஆற்றில்தான் ஆயிரம் லிங்கங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு சிவலிங்கம் தவிர, ராமர், கிருஷ்ணர், லட்சுமி போன்ற சுவாமி சிலைகளும் இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago