முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

உலகின் மிகச் சிறிய பாலூட்டி

உலகிலேயே மிகச் சிறிய பாலூட்டி விலங்கு எது தெரியுமா.. கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்.. bumblebee bat என்று அழைக்கப்படும் சிறிய வவ்வால்கள்தான் அவை. இவற்றின் உடல்களின் மொத்த நீளமே 1.14 முதல் 1.29 அங்குலம் மட்டும்தான்.  அதன் இறக்கைகளின் அகலம் 5.1 முதல் 5.7 அங்குலம் மட்டுமே. இந்த வவ்வால்கள் கின்னஸிலும் இடம் பிடித்துள்ளன. தாய்லாந்திலுள்ள Khwae Noi River நதிக்கரையில் அமைந்துள்ள Kanchanaburi மாகாணத்தில் அமைந்துள்ள குகைகளில் இவ்வகை வவ்வால்கள் வாழ்கின்றன.

தோலுக்கு மருந்து

பூவரசம் பூ, ரத்தத்தை சுத்தப்படுத்த கூடியது. மருதாணி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு ஆரோக்கியம் தரவல்லது. தோலுக்கு அழகை தருகிறது. நகப்பூச்சாக பயன்படுகிறது. அருகம்புல் ரத்தத்தை சுத்தப்படுத்தும் மூலிகையாக விளங்குகிறது. தோலில் ஏற்படும் அலர்ஜி, அரிப்புக்கான மருந்தாக விளங்குகிறது.

சைவ உணவு சாப்பிடும் முதலை கேரளாவில் அதிசயம்

பொதுவாக சிறிய விலங்குகள், மீன்கள் ஆகியவற்றை வேட்டையாடி உண்ணும் வகையைச் சேர்ந்தவைதான் முதலைகள். ஆனால் வடக்கு கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ளது ஸ்ரீஅனந்தபுரம் கோவில் என்ற இடம். இங்குள்ள கோவிலில் ஸ்ரீஅனந்தபுரம் பத்மநாப சுவாமிகள் அருள் பாலிக்கிறார்.  அக்கோயிலில் உள்ள குளத்தில் வசிக்கும் முதலை தான் இப்போது ஹைலைட். அவர்தான் நம்ம வெஜிடேரியன் முதலை. பாபியா என அப்பகுதி மக்களால் செல்லமாக அழைக்கப்படும் இது சில வேளைகளில் கோயிலுக்கு உள்ளேயும் வந்து விடுவதுண்டு.  கோயிலில் சமைக்கும் உணவுதான் இந்த முதலைக்கும் வழங்கப்படுகிறது.  இது எப்போது வந்தது என்று யாருக்கும் தெரியாது. கோயில் குருக்கள் அதற்கு கோயில் யானைக்கு கொடுப்பது மாதிரி சாதாரணமாக உணவை படைக்கிறார். நமக்கு படியளக்கும் பகவான்தான் அதற்கும் படியளக்கிறார் எனக் கூறும் குருக்கள், அந்த முதலை இதுவைர யாரையும் தாக்கியதில்லை என்கிறார். சாதுவான பூனை போல கோயில் பிரகாரத்தில் வலம் வருகிறார் முதலையார். 

திருப்பதி ஏழுமலையானின் தினசரி ‘மெனு’

அதிகாலை சுவாமியை சுப்ர பாதத்துடன் துயில் எழுப்பிய பின்னர், அவருக்கு வெண்ணெய், நுரை ததும்ப பசும்பால் படைக்கப்படுகிறது. தோமாலை, சகஸ்ரநாம அர்ச்சனை சேவைகளுக்குப் பிறகு சுவாமிக்கு எள், சுக்கு, வெல்லம் கலந்த பானகம் சாத்துபடி. இவைகளைத் தொடர்ந்து காலை 6 மணியிலிருந்து 6.30 மணிக்குள் பால போக நைவேத்தியமாக புளியோதரை, தயிர் சாதம், வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், ரவா கேசரி சமர்ப்பிக்கப்படும். இதன் பின்னர் சர்வ தரிசனம் தொடங்கும். நண்பகல் 11 மணியில் இருந்து 11.30 மணிக்குள் ராஜ போகம் நைவேத்தியம். இதில், வெண் சாதம், சர்க்கரை அன்னம், புளியோதரை, கூடை அன்னம், போன்றவை படைக்கப்படுகிறது. மாலை 7 மணியளவில் சயன போக நைவேத்யத்தில் மிளகு அன்னம், தோசை, லட்டு, வடை மற்றும் பல காய்கறிகளால் சமைக்கப்பட்ட அன்னம் சமர்ப்பிக்கப்படும்.இத்துடன் ஏழுமலையானின் ‘மெனு’ முடியவில்லை. இரவு ‘திருவீசம்’ எனும் பெயரில் வெல்லத் தால் தயாரிக்கப்பட்ட அன்னம் படைக்கப்படும். பின்னர் சுவாமி பள்ளியறைக்குச் செல்லும் முன் ஏகாந்த சேவையின்போது, நெய்யினால் மிதமாக வறுக்கப்பட்ட பாதாம், முந்திரி மற்றும் பழங்கள், பால் போன்றவை சமர்ப்பிக்கப்படுகிறது. பின்னர் இவை பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படும்.

பயம் வேண்டாம்

நம்முடைய மார்பின் ஒரு பக்கம் மட்டும் வலியை உணர்ந்தால் இது இருதய சம்பந்தமான நோய் என்று பயப்படவேண்டாம்.  அதற்கு எலும்பு முறிவு, குருத்தெலும்பு அழற்சி, வைரஸ் தொற்றுகள், மார்பு தசைகளுக்கு கொடுக்கப்படும் கஷ்டம், அதிகப்படியான அமில சுரப்பு போன்றவை காரணங்களாக இருக்கலாம்.

இதுவும் காரணம்

பூமிக்கு அடியில் செலுத்தப்படும் கழிவுநீரால் நிலத்தட்டுகள் நகரும் நிகழ்வு ஏற்பட்டு, அதன்மூலம் நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.கழிவுநீரைச் செலுத்த பாதுகாப்பான இடங்கள் குறித்து ’ஸ்ட்ரெஸ் மேப்ஸ்’ என்று அழைக்கப்படும் வரைபடங்களை அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!