முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

கேரளா குடம்புளி மீன் குழம்பு

Cooking time in minutes: 
25
Ingredients: 

கேரளா குடம்புளி மீன் குழம்பு செய்யத் தேவையான பொருள்கள்;

 1. மீன் – 1 கிலோ.
 2. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 4.
 3. பொடியாக நறுக்கிய தக்காளி - 3.
 4. பொடியாக நறுக்கிய பூண்டு – 5 பல்.
 5. பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிதளவு.
 6. குடம்புளி - 10.
 7. மீன் மசாலா - 4 டீஸ்பூன்.
 8. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 5.
 9. ரிபைன்ட் ஆயில் - தேவையான அளவு.
 10. தேங்காய் - 1/2 மூடி.
 11. மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன். 
 12. வெந்தயம் - 1/2 ஸ்பூன்.
 13. கடுகு - 1/2 ஸ்பூன்.
 14. கருவேப்பிலை - சிறிதளவு.
 15. மல்லி தூள் - 3 டீஸ்பூன்.  
 16. மிளகாய் தூள் - 2 ஸ்பூன்.
 17. உப்பு - தேவையான அளவு. 
Method: 

 

மீன் குழம்பு செய்முறை ;

 1. 1/2 மூடி தேங்காய்யை நறுக்கி மிக்சியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
 2. அடுப்பில் கிடாய் வைத்து சிறிதளவு ரிபைன்ட் ஆயில் ஊற்றவும்.
 3. எண்ணெய் சூடானவுடன் வெந்தயம் 1/2 ஸ்பூன், கடுகு 1/2 ஸ்பூன், பொடியாக நறுக்கிய பூண்டு 5, பொடியாக நறுக்கிய இஞ்சி சிறிதளவு, மற்றும் கருவேப்பிலை சிறிதளவு போட்டு நன்றாக வதக்கவும்.
 4. பொடியாக நறுக்கிய 4 பெரிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
 5. பொடியாக நறுக்கிய தக்காளி 3, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 5, குடம்புளி 10, மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.
 6. மஞ்சள் தூள் 1 டீஸ்பூன், மல்லி தூள் 3 டீஸ்பூன், மிளகாய் தூள் 2 டீஸ்பூன், மீன் மசாலா தூள் 4 டீஸ்பூன், போட்டு  தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊற்றி கலந்து விட்டு 5 நிமிடம் குழம்பை கொதிக்க வைக்க வேண்டும்.
 7. அரைத்து வைத்துள்ள 1/2 மூடி தேங்காய் விழுதை போட்டு கலந்து விடவும்.
 8. இதனுடன் நன்றாக கழுவி வைத்த 1 கிலோ  மீனை போட்டு 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
 9. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
 10. சுவையான கேரளா குடம்புளி மீன் குழம்பு ரெடி.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis