Idhayam Matrimony

நாட்டில் சமூக நீதியை நிலைநாட்ட மத்திய அரசு உறுதி: இந்தியா, உலகின் 3 - வது பெரிய பொருளாதாரமாக வளர்ந்துள்ளது பார்லி., கூட்டுக்குழு கூட்டத்தில் ஜனாதிபதி பெருமிதம்

புதன்கிழமை, 28 ஜனவரி 2026      இந்தியா
Parliament 2022 12-06

Source: provided

புதுடெல்லி: உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்த ஜனாதிபதி திரெளபதி முர்மு, நாட்டில் சமூக நீதியை நிலைநாட்ட மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக நேற்று பாராளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் உரையாற்றினார்.

பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று (புதன்கிழமை) தொடங்கியது. வரும் ஏப்ரல் மாதம் 2-ந் தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத் தொடரை 2 கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தொடரின் தொடக்கத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு நேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது;- “நாட்டில் பின்தங்கிய மக்களை முன்னேற்றுவதே அரசின் நோக்கம். அருணாசல பிரதேசம், திரிபுரா, மிசோரம் மாநில தலைநகரங்கள் அகல ரெயில் பாதையுடன் இணைக்கப்பட்டுள்ளன.

மின் வாகன உற்பத்தியில் இந்தியா புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அசாமில் செமிகண்டக்டர் ஆலை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விண்வெளி சுற்றுலா வெகு தூரத்தில் இல்லை. நாட்டில் சமூக நீதியை நிலைநாட்ட மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இந்தியாவில் பொருளாதாரம் வலுவாக உள்ளது. உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது.

மெட்ரோ கட்டமைப்பில் 3-வது பெரிய நாடாக இந்தியா மாறி இருக்கிறது. தமிழகத்தில் புதிய பாம்பன் பாலம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 350 மில்லியன் டன் உணவு தானிய உற்பத்தி செய்து இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் உள்ள கிராமங்கள் நெடுஞ்சாலைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், சமூக பாதுகாப்பு திட்டங்கள் 25 கோடி குடிமக்களை மட்டுமே சென்றடைந்தன. அரசாங்கத்தின் முயற்சிகளால் தற்போது சுமார் 95 கோடி இந்தியர்கள் சமூக பாதுகாப்புத் திட்டங்களால் பயன் பெறுகின்றனர்.

25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். ஜல்ஜீவன் மிஷன் திட்டம் மூலம் 12.5 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இனி வரும் ஆண்டுகளில் 4 கோடி கான்கிரீட் வீடுகள் வழங்கப்படும். 

லட்சாதிபதி சகோதரிகள் திட்டத்தில் நாடு முழுவதும் 2 கோடி பெண்கள் லட்சாதிபதியாக மாற்றி உள்ளனர்.  ஏழைக்களுக்காக தொடங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் 2.5 கோடி பேர் பயன் பெற்றுள்ளனர்.  எதிரிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் இந்தியாவின் வீரம் வெளிச்சம்போட்டு காட்டப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும். இடதுசாரி பயங்கரவாதத்திற்கு எதிராக வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது இடதுசாரி பயங்கரவாதம் வெறும் 8 மாவட்டங்களில் மட்டுமே உள்ளது.  100-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இடதுசாரி பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதால் மக்கள் நிம்மதியாக வாழ முடிகிறது. இந்தியாவில் விரைவில் இடதுசாரி பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும். கடந்தாண்டு 50 ஆயிரமாக இருந்து ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எண்ணிக்கை இந்தாண்டு 2 லட்சமாக உயர்ந்துள்ளது. 2 லட்சம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூலம் 2 லட்சம் நபர்களுக்க வேலை கிடைத்துள்ளது. உலகக்கோப்பைகளை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, மகளிர் பார்வையற்றோர் கிரிக்கெட் அணிகளுக்கு பாராட்டுகள். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து