எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை: மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் புனேவில் நடந்த பிரச்சார கூட்டத்திற்கு விமானத்தில் சென்ற போது விமானம் விபதுக்குள்ளானதில் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் நடைபெற இருந்த பிரச்சாரத்தில் கலந்து கொள்வதற்காக, அந்த மாநிலத்தின் துணை முதல்வர் அஜித் பவார் சிறிய ரக தனி விமானத்தில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பாராமதி பகுதி அருகே தரையிறங்க முயன்றபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு எதிர்பாராத விதமாக விமானம் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது.
விபத்தில் சிக்கிய விமானம் உடனடியாக தீப்பற்றி எரியத் தொடங்கியது. நேற்று காலை 8.45 மணியளவில் நடந்த இந்த கோர விபத்தில் அஜித் பவார் உள்பட, விமானத்தில் பயணித்த அவரது பாதுகாவலர்கள் 2 பேர் மற்றும் விமானிகள் 2 பேர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்ததாக விமானத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.
நாட்டின் மூத்த அரசியல் தலைவர் சரத் பவாரின் அண்ணன் அனந்த்ராவ் பவாரின் மகனான அஜித் பவார்(வயத் 67), மகாராஷ்டிரா துணை முதல்வர் யாக 6 முறை பதவி வகித்தவர் ஆவார். மாநிலத்தின் நிதித்துறை, மின்சாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளின் அமைச்சராகவும் அஜித் பவார் இருந்துள்ளார்.
சரத் பவாரின் அரசியல் வாரிசு யார் என்பதில் ஏற்பட்ட மோதலால் அஜித் பவார் தனித்து செயல்பட்டார். அவரது பிரிவையே உண்மையான தேசியவாத காங்கிரஸ் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. மகாராஷ்டிராத்தில் பா.ஜ.க. கூட்டணி அரசில் 3-வது பெரிய கட்சியாக அஜித் பவாரின் கட்சி உள்ளது. அஜித் பவாரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் யும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருமான அஜித்பவார் விமான விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 66. இந்த விமான விபத்து நேற்று காலை மகாராஷ்டிர மாநிலம் பாராமதி விமான நிலையத்தில் நடந்தது. இந்த விமான விபத்தில் அஜித் பவாருடன் விமானத்தில் இருந்த மேலும் 5 பேரும் பலியானார்கள்.
இந்த நிலையில், அஜித் பவார் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தி.மு.க. தலைவரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மாண்புமிகு மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் பலர் ஒரு துயரமான விமான விபத்தில் இறந்ததை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். சோகத்தின் அளவை ஜீரணிக்க கடினமாக உள்ளது. சரத் பவார் மற்றும் இந்த கொடூரமான விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


