முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மேகி ஆம்லெட்

Cooking time in minutes: 
10
Ingredients: 

 

மேகி ஆம்லெட் செய்யத் தேவையான பொருட்கள். 

  1. மேகி நூடுல்ஸ் - 3 பாக்கெட்
  2. நூடுல்ஸ் மசாலா பொடி - 3 பாக்கெட்.
  3. முட்டை - 5.
  4. மிளகாய்  தூள் - ஒரு ஸ்பூன்.
  5. மிளகு தூள் - 1/2 ஸ்பூன்.
  6. பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிதளவு.
  7. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1.
  8. பொடியாக நறுக்கிய தக்காளி - 1/2.
  9. பொடியாக நறுக்கிய குடைமிளகாய் - சிறிதளவு.
  10. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2.
  11. துருவிய கேரட் - 2.
  12. பொடியாக நறுக்கிய மல்லி இலை - சிறிதளவு.
  13. எண்ணெய் – 2 ஸ்பூன்.
  14. உப்பு - தேவையான  அளவு.
Method: 

செய்முறை ;--

அடுப்பில் கடாய் வைத்து  சிறிதளவு தண்ணீர் ஊற்றவும்,தண்ணீர் சூடானவுடன் 3 பாக்கெட் மேகி நூடுல்ஸ் மற்றும் தேவையான  அளவு உப்பு போட்டு கலந்து விட்டு கடாய்யை மூடி போட்டு மூடி நன்றாக வேக வைக்கவும்.

இதனுடன் 2 பாக்கெட் நூடுல்ஸ் மசாலா பொடியை தூவி விட்டு நன்றாக கலந்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 5 முட்டையை உடைத்து  ஊற்றவும்,இதனுடன் ஒரு ஸ்பூன் மிளகாய்  தூள்,மிளகு தூள் 1/2 ஸ்பூன்,பொடியாக நறுக்கிய சிறிதளவு இஞ்சி,பொடியாக நறுக்கிய ஒரு  பச்சை மிளகாய்,பொடியாக நறுக்கிய பாதி தக்காளியை போட்டு நன்றாக கலந்து விடவும்.

இதனுடன் பொடியாக நறுக்கிய குடைமிளகாய் சிறிதளவு,பொடியாக நறுக்கிய 2 பெரிய வெங்காயம்,துருவிய 2 கேரட் பொடியாக நறுக்கிய  மல்லி இலை சிறிதளவு மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் கடாய் வைத்து  ஒரு ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றவும்.

எண்ணெய் சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள முட்டைக்கலவையை ஊற்றி பரப்பி விட்டு ஒரு ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றி கடாய்யை மூடி போட்டு மூடி வேக விடவும்.

கடாயின் மூடியை திறந்து தயார் செய்து வைத்துள்ள நூடுல்சை சிறிதளவு போடவும்.

ஆம்லெட்டை பாதியாக மடக்கி வேக விடவும்.

அடுப்பில் இருந்து ஆம்லெட்டை இறக்கி ஒரு தட்டில் எடுத்துக்கொண்டு தேவையான அளவு வெட்டி பரிமாறவும்.

சுவையான மேகி ஆம்லெட் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்