Idhayam Matrimony

மத்திய அரசு திட்டங்களுக்கு நேரடி நிதி; ரிசர்வ் வங்கியில் கணக்கு துவக்கிய தமிழ்நாடு அரசு

சனிக்கிழமை, 13 செப்டம்பர் 2025      தமிழகம்
TN 2023-04-06

Source: provided

சென்னை : மத்திய அரசின் உதவியுடன், மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்களுக்கான செலவு தொகையை, நேரடியாக வழங்கும் பணி துவங்கி உள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசு, ரிசர்வ் வங்கியில், 92 தனித்தனி கணக்குகளை துவக்கி உள்ளது.

ஊரக வளர்ச்சி, மக்கள் நல்வாழ்வு, கல்வி, நகர்ப்புற வளர்ச்சி, சுற்றுச்சூழல் மேம்பாடு, விவசாயம் போன்ற பல துறைகளில், மத்திய அரசு சார்பில் திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. இதற்கான நிதியை ஒதுக்கினாலும், அதை பயன்படுத்தி, மாநிலங்களில் நேரடியாக மத்திய அரசால் திட்டப் பணிகளை செயல்படுத்த முடியாது. மாநில அரசுகளே, இந்நிதியை பயன்படுத்தி, வேறு பெயர்கள் சூட்டி திட்டங்களை செயல்படுத்துவது வழக்கம்.

இதுவரை திட்டங்களுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியானது, மாநில அரசு துறைகளுக்கான கருவூல கணக்கில் செலுத்தப்படும். இவ்வாறு பெறப்படும் நிதி, மத்திய அரசின் நோக்கத்தை சரியாக பூர்த்தி செய்கிறதா என்பது கேள்விக்குறியே. சில நேரங்களில், குறிப்பிட்ட திட்டங்களுக்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதியை, மாநில அரசுகள் வேறு பணிக்கு பயன்படுத்துவதும் உண்டு. இதனால், திட்டத்தின் பயன் மக்களுக்கு கிடைக்காமல் போகிறது.

இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண, புதிய கட்டுப்பாட்டை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி, மத்திய அரசு அறிவித்த திட்டங்களுக்கான நிதியை பெற, ரிசர்வ் வங்கியில் மாநில அரசு ஒரு கணக்கு துவக்க வேண்டும். அந்த கணக்கில், சம்பந்தப்பட்ட திட்ட பணியை மேற்கொள்ளும் நிறுவனம் அல்லது நபர்கள் குறித்த விபரங்கள் சேர்க்கப்படும். குறிப்பிட்ட திட்ட பணிகள் முடிந்த விபரத்தை தெரிவிக்கும் போது, ரிசர்வ் வங்கியில் இருந்து, சம்பந்தப்பட்ட நிறுவனம் அல்லது நபர்களுக்கு, மத்திய அரசின் நிதி நேரடியாக சென்று விடும்.

இதுகுறித்து, தமிழக அரசின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:-  திட்டப்பணிகளுக்கான செலவு தொகையை நேரடியாக வழங்கும் புதிய நடைமுறையை, மத்திய அரசு, 2024 - 25ம் நிதியாண்டில் துவக்கியது. இதில், தமிழகமும் சேர்ந்துள்ளது. அதன்படி, மத்திய அரசு நிதி வழங்கும் திட்டங்களில், தமிழகம் தொடர்புடைய, 96 திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில், 92 திட்டங்களுக்கு கருவூலத்துறை வாயிலாக, ரிசர்வ் வங்கியில் பணம் எடுக்க கணக்கு துவக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 46 திட்டங்களுக்கு நேரடியாக மத்திய அரசு நிதி விடுவிக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து