எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வெஜ் நக்கெட்ஸ்
வெஜ் நக்கெட்ஸ் செய்யத் தேவையான பொருட்கள்.
- உருளைக்கிழங்கு - 5.
- பொடியாக நறுக்கிய பீட்ருட் - 50 கிராம்.
- பொடியாக நறுக்கிய பீன்ஸ் - 100 கிராம்.
- பொடியாக நறுக்கிய கேரட் - 100 கிராம்.
- பச்சை பட்டாணி - 100 கிராம்.
- அரிசி மாவு - 100 கிராம்.
- இஞ்சி,பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்.
- சில்லி பிளக்ஸ் - ஒரு ஸ்பூன்.
- சீரக தூள் - ஒரு ஸ்பூன்.
- மிளகு தூள் - ஒரு ஸ்பூன்.
- மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்.
- சோம்பு தூள் - ஒரு ஸ்பூன்.
- பிரட் கிரம்ஸ் - 200 கிராம்.
- கான் பிளவர் மாவு - 4 ஸ்பூன்.
- எண்ணெய் - 1/2 லிட்டர்.
- உப்பு - தேவையான - அளவு.
செய்முறை ;--
- அடுப்பில் குக்கரை வைத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி 5 உருளைக்கிழங்கை பாதியாக வெட்டி போட்டு 4 விசில் வரும்வரை உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து தோல் உரித்து,உருளைக்கிழங்கை நன்றாக மசித்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் குக்கரை வைத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி குக்கரின் உள்ளே ஒரு சிறிய பாத்திரத்தை வைத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பொடியாக நறுக்கிய 50 கிராம் பீட்ருட்,பொடியாக நறுக்கிய பீன்ஸ் 100 கிராம்,பொடியாக நறுக்கிய கேரட் 100 கிராம்,பச்சை பட்டாணி 100 கிராம் போட்டு 5 விசில் வரும் வரை நன்றாக வேக வைத்து வடிகட்டி,ஒரு பாத்திரத்தில் எடுத்து நன்றாக மசித்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கையும்,மசித்து வைத்துள்ள பீட்ருட், பீன்ஸ் கேரட்,பச்சை பட்டாணியையும் போடவும்.
- இதனுடன் அரிசி மாவு 100 கிராம்,இஞ்சி,பூண்டு விழுது ஒரு ஸ்பூன்,சில்லி பிளக்ஸ் ஒரு ஸ்பூன்,சீரக தூள் ஒரு ஸ்பூன்,மிளகு தூள் ஒரு ஸ்பூன்,மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்,சோம்பு தூள் ஒரு ஸ்பூன், பிரட் கிரம்ஸ் 100 கிராம், மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு தட்டில் மாவை வைத்து சதுரமாக தட்டி,அதை சிறு சிறு சதுர துண்டுகளாக வெட்டி தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் 4 ஸ்பூன் கான் பிளவர் மாவை எடுத்து கொள்ளவும்.
- இதனுடன் தேவையான அளவு உப்பு போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி
- நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு தட்டில் 100 கிராம் பிரட் கிராம்சை எடுத்துக் கொள்ளவும்.
- கலந்து வைத்துள்ள கான் பிளவர் மாவு கலவையில் சதுரமாக வெட்டி வைத்துள்ள மாவை போட்டு முக்கி எடுத்து பின்னர் பிரட் கிரம்ஸில் போட்டு மாவின் எல்லா பக்கங்களிலும் பிரட் தூள்கள் ஒட்டும்படி பிரட்டி எடுத்து தயார் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- இதே போல் மீதம் உள்ள மாவையும் தயார் செய்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய்யை வைத்து 1/2 லிட்டர் எண்ணெய்யை ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள மாவை எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
- திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொரிக்கவும்.
- இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
- சுவையான வெஜ் நக்கெட்ஸ் ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
சென்னையில் இருந்து புறப்பட்ட பெங்களூர் விமானத்தில் திடீர் எந்திர கோளாறு
19 Oct 2025சென்னை, சென்னையில் இருந்து பெங்களூருக்கு நேற்று காலை 10.45 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் புறப்பட தயாரானது.
-
பாகிஸ்தானும் - ஆப்கானிஸ்தானும் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக கத்தார் வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு
19 Oct 2025தோஹா : பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக கத்தார் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
விருதுகளில் நம்பிக்கை இல்லை: நடிகர் விஷால்
19 Oct 2025சென்னை, எனக்கு விருதுகளில் நம்பிக்கை இல்லை. விருதுகள் எல்லாம் பைத்தியக்காரத்தனம்.
-
2,400 அடி உயரத்திற்கு வெடித்து சிதறியது கிளாவியா எரிமலை..!
19 Oct 2025ஹவாய், கடந்த ஆண்டில் இருந்து அடிக்கடி கிளாவியா எரிமலை குழம்புகளை வெளியேற்றி வரும் நிலையில், தற்போது 2,400 அடி உயரத்துக்கு எரிமலை குழம்புகளை பீச்சி அடித்துள்ளது.
-
வாடிக்கையாளர் ஆய்வறிக்கை: உலகளவில் சென்னை மெட்ரோ முதலிடம்
19 Oct 2025சென்னை, அக். 20- உலகம் முழுவதும் உள்ள 32 மெட்ரோ நிறுவன வாடிக்கையாளர் ஆய்வறிக்கையில் சென்னை மெட்ரோ முதலிடம் பிடித்துள்ளது.
-
மலைப்பாதையில் பாறை சரிவு: திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு எச்சரிக்கை
19 Oct 2025திருப்பதி, தொடர் விடுமுறையை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திருப்பதி கோவிலுக்கு அதிக அளவில் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் திருப்பதி மலைப்பாதையில்
-
காசா மக்கள் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தக்கூடும்: அமெரிக்கா திடீர் எச்சரிக்கை
19 Oct 2025நியூயார்க், காசாவில் தற்போது நடைமுறையில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பு மீறி காசா மக்களின் மீதே தாக்குதல் நடத்தக்கூடும் என்று நம்பத்தகுந்த உளவுத்துறை தகவல்
-
3 மாதங்களில் 10 ஆயிரம் கி.மீ. பயணம்: சைக்கிளில் உலகம் சுற்றும் இளைஞர்
19 Oct 2025பாரீஸ் : சைக்கிளில் உலகம் சுற்றும் பிரான்ஸ் இளைஞர் புதுச்சேரி வந்துள்ளார். அவர் 3 மாதங்களில் 10 ஆயிரம் கி.மீ தொலைவு பயணிக்கிறார்.
-
உயிர் தப்பிய 25,000 அமெரிக்க மக்கள்.. கரீபியன் கடலில் சம்பவம் குறித்து ட்ரம்ப் விளக்கம்
19 Oct 2025நியூயார்க், அமெரிக்காவுக்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.