Idhayam Matrimony

'வித் லவ்' பட தயாரிப்பாளர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2026      சினிமா
CM1-2026-02-17

சென்னை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை “வித் லவ்” திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் செவ்வாய்க்கிழமை (பிப். 17) நேரில் சந்தித்து உரையாடியுள்ளனர்.

இயக்குநர் அபிஷன் ஜீவிந் நாயகனாக அறிமுகமான “வித் லவ்” திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் மதன் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையில் உருவான இப்படத்தில் மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நாயகியாக நடித்திருந்தார். பிரபல நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட மூத்த நடிகர்கள் “வித் லவ்” படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளனர்.

இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை”வித் லவ்” படத்தின் தயாரிப்பாளர்கள் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் ராஜ் ஆகியோர் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றதாகக் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, வித் லவ் திரைப்படம் வெளியான 10 நாள்களில் ரூ. 25 கோடி வசூல் செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து