முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 2030 - ம் ஆண்டுக்குள் 8 லட்சம் கலைஞர் கனவு இல்லம் கட்டப்படும்: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல்

செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2026      தமிழகம்
Tangam 2025-03-14

சென்னை, வரும் 2030-க்குள் 8 லட்சம் கலைஞர் கனவு இல்லம் கட்டப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-2027ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றினார். பட்ஜெட் உரையின்போது அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்ததாவது:

கடந்த 5 ஆண்டுகளில் ஆட்சேபனையற்ற அரசு நிலங்களில் வசிப்போருக்கு ஒருமுறை சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தில் 77,800 இணையவழி பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. வரும் 2030-க்குள் 8 லட்சம் கலைஞர் கனவு இல்லம் கட்டப்படும். கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 1,71,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 29,000 வீடுகளின் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்று அவர் தெரிவித்தார்.

குடிசை மற்றும் சேதமடைந்த வீடுகளில் வசிப்பவர்கள், பட்டா இருந்தும் சொந்தமாக வீடு இல்லாத ஏழை, எளிய மக்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு ஊரக வளா்ச்சி முகமை மூலமாக 360 சதுர அடி பரப்பளவில் சமையலறை, கழிவறை வசதிகளுடன் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் ரூ. 3.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடுகள் கட்டித் தரப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து