Idhayam Matrimony

இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2026      தமிழகம்
Tangam 2025-03-14

சென்னை, தமிழக இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ. 48,534 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-2027ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றினார். பட்ஜெட் உரையின்போது அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்ததாவது: பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ. 48,534 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பட்டப்படிப்புடன் தொழில்நுட்பப் பயிற்சியும் பெரும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாணவர்கள் அனைவரும் இடைநிற்றலின்றி கற்பதற்கான சூழலை உருவாக்கிட தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இந்தக் குறிக்கோள்களை எட்டிட கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள், உதவித்தொகை என பல்வேறு முன்னெடுப்புகளை அரசு செய்து வருகிறது. கல்லூரி மாணவர்களின் தொழில்நுட்பத்திறனை வளர்க்க 10 லட்சம் பேருக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை 6 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து