Idhayam Matrimony

திருச்சி, மதுரை, ஒசூரில் புதிய டைடல் பூங்காக்கள்: இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2026      தமிழகம்
CM-2-2026-02-17

சென்னை, தமிழ்நாட்டில் திருச்சி, மதுரை, ஒசூரில் புதிய டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருவதாக பட்ஜெட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 7 இடங்களில் டைடல் நியோ மினி தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் 9 இடங்களில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் பட்ஜெட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றினார்.  தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சாதனைகள் மற்றும் அறிவிப்புகளை வெளியிட்ட அவர், தமிழகத்தில் திருச்சி, மதுரை, ஒசூரில் ரூ. 1,070 கோடி மதிப்பில் புதிய டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி, வேலூர், காரைக்குடி, திருப்பூர் ஆகிய 7 நியோ டைடல் பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன. நாமக்கல், திருவண்ணாமலை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, நாகப்பட்டினம், கரூர், புதுக்கோட்டை ஆகிய 9 நியோ டைடல் பூங்காக்கள் ரூ. 388 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலமாக 25,500 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு செமிகண்டக்டர் இயக்கம் 2030 திட்டத்தில் ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ரூ. 2.5 லட்சம் கோடி தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஏற்றுமதி செய்யப்படுகிறது. சென்னையில் 250 உலகளாவிய திறன் மையங்கள் கோவை, மதுரை, திருச்சியில் உருவாக்கப்பட்டு வருகின்றன. 2024-2025ல் 32 மாவட்டங்களிலிருந்து தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. நாட்டிலே முதல் முறையாக ஆழ்நிலைத் தொழில்நுட்பப் புத்தொழில் நிறுவனக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது" என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து