முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சளி, இருமல் மற்றும் ஆஸ்துமா குணமாக சில இயற்கை வைத்தியம் டிப்ஸ்

ph

கபம் உடைந்து வெளியேற ;-- கலவை கீரையை வாரம் இரு முறை உண்டு வரலாம்.

எலும்புருக்கி நோய் குணமாக ;--புறால் இலையை பொடி செய்து அரிசி மாவுடன் கலந்து அடை செய்து சாப்பிட குணமாகும்.

கபரோகம் தீர ;--  சங்கிலை தூதுவளை இலை பசும்பாலில் அரைத்து சாப்பிட்டு வரவும்.

கிராணி,குன்மம்,கப நோய்கள் தீர ;-- அழிஞ்சல்  இலையை அரைத்து ஒரு கிராம் காலை,மாலை கொடுக்கலாம்.

கபம் குணமாக ;-- கருந்துளசி இலை சாறு பிழிந்து இரண்டு வேளை 3 நாட்கள் சாப்பிட்டு வரவும்.

கபம் நீங்க ;-- சுண்டைக்காய்யை சமைத்து  உண்ண வேண்டும்.

கபம் வெளியாக ;-- சிறுகுருஞ்சா வேர் பொடியை வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.

சகல பிணி சரோகமும் தீர ;--  விழுதி இலை சாற்றில் நல்லெண் ணை கலந்து காய்ச்சி தலை முழுகலாம்.

ஜலதோசம் நீங்க ;-- துளசி ரசம்,இஞ்சிரசம் கலந்து பருகலாம்.

ஆஸ்துமா தீர ;-- நொச்சி இலை,மிளகு,லவங்கம்,பூண்டு ஆகியவற்றை மென்று விழுங்கலாம்.

சளி தீர ;-- நத்தை சூரி இலை சாறை 15 மில்லி காலை,மாலை சாப்பிடலாம்.

சளியை அகற்ற ;-- துளசியை அவித்து சாறு பிழிந்து குடிக்கலாம்.

மார்பு சளி தீர ;-- பொடுதலை,இஞ்சி,புதினா,கொத்தமல்லி,கறிவேப்பிலை ஆகியவற்றை துவையல் செய்து சுடுசோற்றில் போட்டுநெய் ஊற்றி  கலந்து உண்ணலாம்.

சளி,சுரம் தீர ;-முகமுகக்கை இலையை தோசை மாவுடன் அரைத்து தோசை செய்து சாப்பிடலாம். 

இருமல் குணமாக ;-ஆடாதோட இலை சாற்றில் தேன் கலந்து சாப்பிடலாம்.

காசம் ;-- ஆடாதோட இலை கஷாயம் செய்து தேன் கலந்து சாப்பிடலாம்.

இளைப்பு,இருமல் குணமாக ;-- விஷ்ணுகிரந்தியை பொடி செய்து வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.

காசம் இறைப்பு நீங்க ;--கரிசலாங்கண்ணி,அரிசிதிப்பிலியை பொடி செய்து தேன்  கலந்து சாப்பிடலாம்.

இருமல் குணமாக ;--  வெந்தயக்கீரையை சமைத்து சாப்பிட்டு வரவும்.

வரட்டு இருமல் குணமாக ;-- மிளகுடன் பொரிகடலை சேர்த்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் 3 வேளை உண்ணலாம்.

சளி தேக்கம் நீங்க ;-- வல்லாரை பொடி,தூதுவளை பொடி பாலில் கலந்து குடித்து வரலாம்.

காச நோய் ;-- தினமும் அரிநெல்லிக்காய் சாப்பிட்டு வரலாம்.

நெஞ்சு சளி ;-- தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து சுட வைத்து நெஞ்சில் தடவலாம்.

காச நோய் குணமாக ;--பசுந்தயிரை உணவில் சேர்க்கவும்.

இருமல்;-- முற்றியவெண்டைக்காயைச் சூப் செய்து குடிக்கலாம்.

மார்பு சளி ;--  இஞ்சி,சீனி சேர்த்து செய்த இஞ்சிமுரப்பா சாப்பிடலாம்.

ஆஸ்துமா மார்பு சளி ;-சுண்டைக்காயை உப்பு நீரில் ஊற வைத்து நன்கு காய வைத்து வறுத்து சாப்பிடலாம்.

ஆஸ்துமா தீர ;-- சிறுகுறிஞ்சா வேர் பொடி,திரிகடுகு பொடி வெந்நீரில் சாப்பிடலாம்.

இருமல் தீர ;-- கண்டங்கத்திரி வேர் ஆடா அதாடை வேர் மற்றும் திப்பிலி கலந்து கஷாயம் செய்து 50 மில்லி குடிக்கலாம்.

கபம்தொந்தரவிற்கும்,ஆஸ்துமா மூச்சுதிணறலுக்கும் ;-- தூதுவளை பழத்தூளை புகை பிடிக்க குறையும்.

ஆஸ்துமா குணமாக ;--வில்வ இலையை பொடி செய்து தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர குணம் பெறலாம்.

நீர் கோர்வை,சளி காய்ச்சல் தீர ;-- ஆறுகீரையில் நெய் சேர்த்து உண்டு வரலாம்.

இதய நோய் குணமாக ;-- மருதம்பட்டை,செம்பருத்திபூ போட்டு கஷாயம் செய்து 48 நாட்கள் சாப்பிட்டு வரலாம்.

நுரையீரல்,சளி இருமல் தீர ;-- பிரமதண்டு இலை பொடி,விதை பொடியை தேனில் கலந்து சாப்பிடலாம்.

ஆஸ்துமா இரப்பிருமல் நுரையீரல் ;-- பிரமதண்டு சமுல சாம்பல் 3 அரிசி எடை தேனில் சாப்பிடலாம்.

இருமல் குணமாக ;-- மாதுளம்பூ பொடியுடன் பனங்கல்கண்டு சேர்த்து காலை,மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வரலாம்.

கக்குவான் இருமல் வேகம் குறைய ;-- சோடா உப்பை தண்ணீரில் கலந்து குடிக்க குறையும்.

இருமல் ;--  இஞ்சி சாறு மற்றும் மாதுளம்பழ சாறுடன் தேன் கலந்து குடிக்கலாம்.

இரைப்பு குணமாக ;--  இஞ்சி,வெள்ளருக்கு பூ மிளகு சேர்த்து கஷாயம் செய்து குடிக்கலாம்.

மார்பு வலி ;--  இஞ்சி சாறு மற்றும் எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிட வலி நிற்கும்.

ஜலதோசம் நீங்க;-துளசி சாறு,இஞ்சி சாறு சம அளவு கலந்து குடிக்கலாம்.

தலைவலி,ஜலதோசம்,இருமல் நீங்க ;-- முள்ளங்கி சாறு சாப்பிடலாம்.

ஜலதோசம் தீர ;-மாதுளம் பழம் சாப்பிடலாம்.

ஆஸ்துமா குணமாக;-வில்வ இலையுடன் மிளகு சேர்த்து மென்று தின்று சுடுநீர் பருகி வர நிற்கும்.

இருமல் குணமாக ;-- சீரகத்தை பொன் வறுவலாக வறுத்து பொடி செய்து கல்கண்டு சேர்த்து சாப்பிடலாம்.

நெஞ்சு கமறல் நீற்க ;-- அதிமதுரத்தை ஒரு சிறு துண்டை வாயில் போட்டுக் கொள்ளலாம்.

வரட்டு இருமல் ;-- மிளகுடன் பொரிகடலை சேர்த்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் வீதம் 3 வேளை உண்ணலாம்.

கபம் நீங்க;-சுண்டைக்காய்யை சமைத்து உண்ண கபம்  நீங்கும்.

சளியில் காணும் இரத்தத்திற்க்கு ;-நொச்சி பூவை உலர்த்தி பொடி செய்து சாப்பிட்டு வர குணமாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago