முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

வயிற்று பொருமல்,வாயுதொல்லை நீங்க இயற்கை மருத்துவம்

 1. செரிமான கோளாறு காரணமாக வருவது வயிற்று பொருமல் மற்றும் வாயுதொல்லை ஆகும்.
 2. அதிகமாக அளவு உணவு சாப்பிட்டாலும் இந்த நோய் வரும், உணவு சாப்பிடாவிட்டாலும் வயிற்றில் வாய்வு சேர்ந்து வயிற்று பொருமல் எற்படும்.
 3. சரியான நேரத்தில் தேவையான அளவு உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும்.
 4. 6 முதல் 60 வயது உள்ள அனைவருக்கும் இந்த நோய் வரும். 
 5. இளம் வயது உள்ளவர்களுக்கு எற்படும் செரிமானக்கோளாறு தானாகவே சரியாகிவிடும்,ஆனால் 40 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு இந்த நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
 6. வாய் துர்நாற்றம் செரிமானக்கோளாறு,வயிற்று பொருமல் மற்றும் வாயுதொல்லை வருவதற்கு  அறிகுறி ஆகும்.
 7. சீரகம்,வசம்பு மற்றும் கருப்பட்டி ஆகியவற்றை நன்றாக அரைத்து சிறிதளவு நீர் விட்டு கலந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி காய வைத்து தேவையானபோது பயன்படுத்த வயிற்று பொருமல்,வாயுதொல்லை நீங்கும். 
 8. ஒரு லிட்டர் தண்ணீரில் 50 கிராம் சீரகத்தை  போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை தொடர்ந்து பயன்படுத்தி வர வயிற்று பொருமல்,வாயுதொல்லை நீங்கும்
 9. பாசிப்பருப்பு சாம்பார் மற்றும் கடலைபருப்பு கூட்டு முதலியவற்றை உணவில் அதிகமாக சேர்த்தால் வயிற்று பொருமல் ஏற்படும்.
 10. வயிற்று பொருமல் மற்றும் வாயுதொல்லை அஜீரணத்தின் அறிகுறி ஆகும்,சுடுநீர் அருந்தினால் காற்று நன்கு பிரியும்.
 11. செரிமானக்கோளாறு,வயிற்று பொருமல் மற்றும் வாயுதொல்லை ஆகியவை தொடர்ந்து இருந்தால், மலச்சிக்கல் வந்துவிடும்,மலச்சிக்கல் வந்தால் வேறுபல நோய்கள் வரவாய்ப்புள்ளது எனவே,ஆரம்ப நிலையிலே செரிமானக்கோளாறை சரி செய்ய  வேண்டும்.
 12. வயிற்று பொருமல்,வாயுதொல்லை நீங்க அதிக அளவு நீர் அருந்த வேண்டும். 
 13. 40 வயதிற்கு மேல் பாசிப்பருப்பு மற்றும் கடலைபருப்பு மூலம் செய்யப்படும் உணவுகளை குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும். 
 14. இரவு உணவில் அதிக பருப்பு வகைகளை பயன்படுத்தக்கூடாது. 
 15. செறிமணக்கோளாறு கோளாறு இருக்கும் போது மேலும் அதே உணவை உண்ணாமல் தவிர்த்தல் நல்லது.
 16. அதிக அளவில் காபி மற்றும் டீயை அருந்துவது செரிமானக்கோளாறை ஏற்படுத்தும்.
 17. எண்ணெய் பலகாரங்களையும்,இனிப்பு வகைகளையும் குறைவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். 
 18. செரிமானக்கோளாறு,வயிற்று பொருமல் மற்றும் வாயுதொல்லை ஆகியவை தொடர்ந்து இருந்தால் அது குடல் புண் இருப்பதன் அறிகுறி ஆகும், எனவே அருகில் உள்ள மருத்துவரை அணுக வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!