முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

வெள்ளை படுதல் காரணங்களும் தீர்வும்.

 

  1. பெண்களுக்கு உடலில் ஏற்படும் தட்ப வெப்ப நிலை மறுபாட்டினால் வெள்ளை படுதல் நிகழ்கிறது.
  2. மாதவிடாய்க்கு  முன் இரண்டு நாட்களும்,மாதவிடாய் முடிந்து இரண்டு நாட்களும் வெள்ளை படுதல் இருப்பது இயல்பான ஒன்றாகும்.
  3. வெள்ளை படுதலை பெண்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் கையால வேண்டும்.
  4. தயிர் போலவும்,ஒரு வித கெட்ட வாடையுடனும் வெள்ளை படுதல் வெளிப்படும்.
  5. பெண்களுக்கு உடலில் ஏற்படும் தட்ப வெப்ப நிலை மாறுதலை கையாள தெரிந்து வைத்து இருப்பது அவசியமாக உள்ளது.
  6. வெள்ளை படுதல் காலத்தில் முதுகு வலி,வயிற்று வலி வர வாய்ப்புள்ளது.
  7. துக்கம் குறைவாக இருந்தாலும்,மனஅழுத்தம் காரணமாகவும், வெள்ளை படுதல் ஏற்பட வாய்ப்புள்ளது.
  8. உடலில்  வாத,பித்த,கப தொந்தரவுகளில்  மறுபட்டினாலும் கபம் எண்ணும் சளி கூடுவதாலும் வெள்ளை படுதல் ஏற்படுகிறது.
  9. பெண்களுக்கு உடல் மிக சூடாகவும்,உடனே மிக குளிர்வாகவும் மாறுவது வெள்ளை படுதலை அதிகரிக்க செய்கிறது.
  10. பித்தம் கூடினால் வெள்ளை படுதல் கூடுவது இயல்பான ஒன்றாகும்,இதனால் பயப்பட தேவையில்லை.
  11. திரிபலா சூரணத்தை பயன்படுத்துவது நல்ல பலனை தரும்.
  12. திரிபலா சூரணம்  என்பது நெல்லி,தான்தோன்றிக்காய் மற்றும் கடுக்காய் ஆகியவற்றை இடித்து செய்யப்படும் மருந்து ஆகும்,இதை வீட்டிலே கூட தயார் செய்து பயன்படுத்தலாம்.
  13. பெண்களுக்கு ஏற்படும் தாழ்வு மனப்பான்மையும்,உடல் சோர்வு,தூக்கம்மின்மை,சரியான உணவு இல்லை என்றால் வெள்ளை படுதல் அதிகரிக்க செய்யும்.
  14. வெந்தயம் வெள்ளை படுத லுக்கு நல்ல மருந்தாக உள்ளது.
  15. இரவு 10 கிராம் வெந்தயத்தை ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து காலை வெறும் வயிற்றில் நீரை பருகி வர வெள்ளை படுதல் குறையும்.
  16. சோற்றுகற்றாழையை சுத்தம் செய்து நடுவில் உள்ள சதை பகுதியை ஜூஸ் செய்து சாப்பிட வெள்ளை படுதல் குறையும்.
  17. வாழைப்பூவை சுத்தம் செய்து வாரம் மூன்று முறை சாப்பிட்டு வரலாம்
  18. உணவில் கீரைகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  19. உளுந்தங்களி மற்றும் உளுந்து கலந்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்வதன் மூலம் வெள்ளை படுதலை விரட்டலாம்.
  20. தினமும் பசும்பாலை பருகிவர வெள்ளை படுதல் குறையும்.
  21. தினமும் இரு முறை குளித்தல்,தேவைப்படும் போது தாமதிக்காமல் உடலை உடனே சுத்தம் செய்வதை பழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
  22. சுத்தம் குறைவதால் வெள்ளை படுதல் காலங்களில் அதிக அரிப்பையும்,நோய் தொற்றையும் எளிதாக கொண்டுவரும்.
  23. சத்துள்ள உணவுகளை உண்பதாலும்,உடலை சுத்தமாகவும்,ஆரோக்கியமாகவும்  வைத்துக்கொள்வதாலும் வெள்ளை படுதலை தடுக்க முடியும்.
  24. மாதவிடாய் முடிந்து பல நாட்கள் கடந்தும் வெள்ளை படுதல் தொடர்ந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்