முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் 36,571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

வெள்ளிக்கிழமை, 20 ஆகஸ்ட் 2021      இந்தியா
Image Unavailable

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 36,571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நாட்டில் கொரோனா 2-வது அலையில் கொரோனா பாதிப்புகளின் தீவிரம் குறைந்து காணப்படுகிறது.  இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் புதிதாக 36 ஆயிரத்து 571 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 23 லட்சத்து 58 ஆயிரத்து 829 ஆக அதிகரித்துள்ளது.  ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 லட்சத்து 63 ஆயிரத்து 605 ஆக குறைந்துள்ளது. கடந்த 150 நாட்களில் முதல் முறையாக கொரோனா தொற்று இந்த அளவுக்கு முதல் முறையாகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் 1.12 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனாவிலிருந்து இதுவரை 3 கோடியே 15 லட்சத்து 61 ஆயிரத்து 635 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் சதவீதம் 97.52 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 524 பேர் கொரோனா சிகிச்சையிலிருந்து குணமடைந்துள்ளனர்.  கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 540 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 33 ஆயிரத்து 589 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை 50 கோடிேய 26 லட்சத்து 99 ஆயிரத்து 702 பேருக்கு மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 18 லட்சத்து 86 ஆயிரத்து 271 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை நாட்டில் ஏறக்குறைய 57.22 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து