முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை அணியில் இணையும் மாற்று வீரர்கள அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 20 மே 2025      விளையாட்டு
Mumbai 2024-04-05

Source: provided

மும்பை : நடப்பு ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகிய வீரர்களுக்குப் பதிலாக மாற்று வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மீண்டும் அணியில்...

நடப்பு ஐ.பி.எல். தொடர் இந்தியா - பாகிஸ்தான் இடையான போர்ப் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டு மீண்டும் துவங்கியுள்ளது. இந்த நிலையில், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகவும், போட்டி அட்டவணை மாற்றம், தேசிய அணிக்கு விளையாட என வீரர்கள் பலர் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பினர். வெளிநாடுகளை சேர்ந்த வீரர்கள் மீண்டும் ஐ.பி.எல்.லில் கலந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அணி நிர்வாகம் மாற்றுவீரர்களை அணியில் இணைத்து வருகின்றனர்.

வாழ்வா? சாவா?...

இதேபோல மும்பை அணிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி இன்னும் 2 லீக் போட்டிகளில் ஆடவுள்ளது. 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள அந்த அணி மீதமுள்ள லீக் போட்டிகளில் வென்று முதல் இரு இடங்களில் ஒரு இடத்தை பிடிக்கும் முனைப்பில் இருந்தாலும், இந்த இரண்டு போட்டியுமே மும்பை இந்தியன்ஸுக்கு வாழ்வா? சாவா? என்ற நிலையிலேயே இருக்கிறது.

மாற்று வீரர்கள்... 

இங்கிலாந்து வீரர் வில் ஜாக்ஸ், தென் ஆப்ரிக்கா வீரர் ரியான் ரிக்கல்டன் ஆகிய இருவரும் மும்பை அணியின் லீக் சுற்றுப் போட்டிகளில் கலந்துகொள்வதாக உறுதியளித்துள்ளனர். பிளே-ஆப் போட்டிகளில் அவர்கள் பங்கேற்க முடியாததால் அவர்களுக்கு மாற்று வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, மும்பை அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று ஆடும் பட்சத்தில், மாற்று வீரர்களாக விளையாடுவதற்கு, இங்கிலாந்து அணியின் ஜானி பேர்ஸ்டோ, ரிச்சர்ட் க்ளீசன் ஆகியோரும், தென்னாப்பிரிக்க வீரர் கார்பின் போர்ஷுக்குப் பதிலாக இலங்கை வீரர் சரித் அசலங்காவும் மும்பை அணியில் இணைந்துள்ளனர்.

ஜானி பேர்ஸ்டோக்கு ரூ.5 கோடி... 

பஞ்சாப் அணிக்காக விளையாடிவந்த ஜானி பேர்ஸ்டோ, ஏலத்தில் விற்பனை ஆகாமல் போன நிலையில் அவரை ரூ.5.25 கோடிக்கும், ரிச்சர்ட் க்ளீசனை ரூ.1 கோடிக்கும், சரித் அசலங்காவை ரூ.75 லட்சத்துக்கும் மும்பை அணி ஒப்பந்தம் செய்திருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து