முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள்: சுப்ரீம் கோர்ட்டில் காரசார விவாதம்: புதிய வக்பு சட்டத்தால் தாஜ்மகால் கூட கைவிட்டுப்போகும் நிலை உள்ளது: கபில் சிபல்

செவ்வாய்க்கிழமை, 20 மே 2025      இந்தியா
Kapil-Sibal 2025-04-18

Source: provided

புதுடெல்லி : புதிய வக்பு சட்டத்தால் தாஜ்மகால் கூட கைவிட்டுப்போகும் நிலை உள்ளது என்று கபில் சிபல் தெரிவித்தார்.

வக்பு திருத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. கடந்த 5-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதலுடன் சட்டம் ஆனது. அந்த சட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க., த.வெ.க. உள்ளிட்ட கட்சிகளும், தொண்டு நிறுவனங்களும் என 70-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் கடந்த மாதம் 17-ந்தேதி நடந்த விசாரணையின்போது 5 மனுக்களை மட்டும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது.  

அதன்படி, வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள் தலைமை நீதிபதி கவாய், அகஸ்டின் ஜார்ஜ் மசி அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு, மனுதாரர்கள் இடையே காரசார விவாதம் நடந்தது. 

அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,  சொத்து யாருக்கு என்பதில் கோர்ட்டால், பயனீட்டாளர்கள், வக்பு போர்டால் அடையாளப்படுத்தும் சொத்துக்களை அறிவிக்க முடியாத நிலை உள்ளது என்று வாதிட்டார்.

இதனையடுத்து மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான கபில் சிபல், ' வக்பு சட்ட திருத்தத்தின் பின்னணியில் உள்ள யோசனைகள் முழு முஸ்லீம் அமைப்பையும் காப்பாற்றுவது போன்ற கைப்பற்றும் நோக்கம் கொண்டதாகும். நீங்கள் மசூதிக்கு சென்றால் பார்க்கலாம் அங்கு காணிக்கை இல்லை. கோவில்களை போல் ஆயிரக்கணக்கான கோடிகள் இல்லை.

ஒருமுறை வக்பு என அறிவிக்கப்பட்டால் அதை எப்போதும் மாற்ற முடியாது. பதிவு செய்யப்பட்ட சொத்தில் தற்போது ஒருவர் சந்தேகம் எழுப்பினால் அந்த சொத்து பறிபோகும் நிலை உள்ளது. மேலும் சிறுபான்மை உரிமையில் தலையிடுவதாகும். புதிய வக்பு சட்டத்தால் தாஜ்மகால் கூட கைவிட்டுப்போகும் நிலை உள்ளது என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் சட்டப்பூர்வமாகவே கருதப்படும். அவை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கருதுவதற்கு வலுவான காரணம் இல்லாவிட்டால் அதில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது. இந்த சூழலில் வேறு எதுவும் எங்களால் சொல்ல முடியாது.  இந்தச் சட்டம் அரசியலமைப்பு சாசனத்துக்கு விரோதமானது என்பதை மனுதாரர்கள் நிரூபிக்க வேண்டும். சட்டத்தில் உள்ள விதிமீறல்கள், தவறுகள் தொடர்பாக போதிய ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும். அதன் பிறகுதான் உரிய முடிவு எடுக்க முடியும். நாளையும் (இன்று) விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து