முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். ட்ரோன்களை எதிர்கொள்ள நடவடிக்கை: பொற்கோயிலில் வான்பாதுகாப்பு அமைப்பை நிறுவுவதற்கு அனுமதி

செவ்வாய்க்கிழமை, 20 மே 2025      இந்தியா
Punjab-Porkovil

Source: provided

அமிர்தசரஸ் : பாகிஸ்தானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை எதிர்கொள்வதற்காக அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலின் புனித வளாகத்தினுள் வான்பாதுகாப்பு அமைப்பினை நிறுவ கோயிலின் தலைமை கிராந்தி சிறப்பு அனுமதி வழங்கியுள்ளதாக ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவால் தொடங்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பின்பு பொற்கோயிலைக் குறிவைத்து பாகிஸ்தான் பலமுறை ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ராணுவ அதிகாரி ஒருவர் உறுதிபடுத்தினார். ராணுவ வான்பாதுகாப்பு இயக்குநர் ஜெனரல் சுமர் இவான் டி குன்ஹா கூறுகையில், "ராணுவத்தின் வான்பாதுகாப்பு அமைப்பினை நிலைநிறுத்திக் கொள்வதற்கு பொற்கோயில் தலைமை கிராந்தி அனுமதி அளித்திருப்பது சிறப்பானது. பல வருடங்களில் முதல் முறையாக அவர்கள் பொற்கோயிலின் விளக்குகளை அணைத்திருக்கலாம். 

அதனால் எங்களால் ட்ரோன்களைத் தெளிவாக பார்க்க முடிந்தது. இதுகுறித்து கோயில் நிர்வாகிகளிடம் விளக்கம் அளித்த பின்பு, அச்சுறுத்தலுக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை புரிந்து கொண்டனர். தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்துசெல்லும் உலகப்புகழ் பெற்ற ஒரு நினைவுச் சின்னத்தைப் பாதுகாப்பதன் அவசியத்தை உணர்ந்து அவர்கள் எங்களுக்கு வான்பாதுகாப்பு அமைப்பினை நிறுவிக்கொள்ள அனுமதி அளித்தனர். அதன்படி ட்ரோன் துப்பாக்கிகள் நிறுவப்பட்டன. பொற்கோயிலின் விளக்குகள் அணைக்கப்பட்டன.

அதிருஷ்டவசமாக அவர்கள் (பாகிஸ்தான்) என்ன செய்வார்கள் என்று நாங்கள் முன்கூட்டியே யூகித்தோம். எல்லைகளைத் தாண்டி தாக்குவதற்கு முறையான இலக்குகள் இல்லாததால், கோயில்களை அவர்கள் குறிவைப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். இந்தியாவில் குழப்பங்களையும், உள்நாட்டு மோதல்களை ஏற்படுத்த அவர்கள் அதிக ஆர்வம் காட்டுவதால், நம்நாட்டு குடிமக்களையும், வழிபாட்டுத்தலங்களையும் குறிவைப்பார்கள் என்று நாங்கள் யோசித்தோம் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து