முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் ராணுவத்தளபதி அசிம் முனீருக்கு திடீர் பதவி உயர்வு

செவ்வாய்க்கிழமை, 20 மே 2025      உலகம்
Pak-Army 2023 05 13

Source: provided

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீருக்கு பீல்ட் மார்ஷலாக பதவி உயர்வு கிடைத்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் சூழலில் மோதலில் முக்கிய முகமாக விளங்கிய அசிம் முனிர் பதவி உயர்வு பெற்றுள்ளார். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்தியாவுடனான மோதலில் முன்மாதிரியான பங்கிற்காக முனீர் பதவி உயர்வு பெற்றதாக அரசு நடத்தும் தொலைக்காட்சி சேனல் பிடிவி செய்தி வெளியிட்டுள்ளது. பீல்ட் மார்ஷல் என்பது ராணுவத்தின் உச்சபட்ச பதவியாக கருதப்படுகிறது. 

பாகிஸ்தான் அமைதியை நாடினாலும், தங்கள் தேசிய கௌரவத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்று அசிம் முனீர் முன்னர் தெரிவிருந்தார். ராணுவ ஜெனரல் ஆவதற்கு முன்னர், முனீர் நாட்டின் உளவுத்துறை நிறுவனமான இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ISI)-க்கு தலைமை தாங்கினார்.

பிப்ரவரி 2019 இல் புல்வாமா தாக்குதலில் 40 CRPF வீரர்கள் கொல்லப்பட்ட பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்தன. நவம்பர் 2022 இல், ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவுக்குப் பதிலாக ஜெனரல் அசிம் முனீர் இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்றார்.

அசிம் முனீர் 2022 முதல் பாகிஸ்தானில் 11வது ராணுவத் தளபதியாகப் பணியாற்றி வருகிறார். நவம்பர் 2024 இல், ராணுவத் தளபதியாக அவரது பதவிக்காலம் மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டது. சமீபத்தில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், அசிம் முனீர் தலைமையிலான இராணுவத்திற்கு அதிக அதிகாரங்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து