முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயிற்சியின் போது ரிஷப் பண்ட் காயம்: இந்திய அணிக்கு சிக்கல்

திங்கட்கிழமை, 9 ஜூன் 2025      விளையாட்டு
Rishabh-Pant 2023-12-12

Source: provided

லார்ட்ஸ் : தொடர் ஆரம்பிப்பதற்குள் முன்னணி வீரர் காயத்தை சந்தித்திருப்பது அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 

சுற்றுப்பயணம்... 

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 20-ம் தேதி லீட்சில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில்லும், துணை கேப்டனாக ரிஷப் பண்டும் செயல்பட உள்ளனர்.

ரிஷப் பண்ட் காயம்...

இந்த தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி கடந்த 6-ம் தேதி இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றது. தற்போது அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் பயிற்சியின்போது முன்னணி வீரரான ரிஷப் பண்டுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று பேட்டிங் பயிற்சி மேற்கொள்ளும்போது இடது கையில் பந்து தாக்கியதில் காயமடைந்த அவர், வலியால் துடித்துள்ளார்.

சிக்கல்...

உடனடியாக அணியின் மருத்துவர்கள் ஐஸ் ஒத்தடம் கொடுத்துள்ளனர். அதன்பின் அவர் நேற்றைய பயிற்சியில் ஈடுபடவில்லை. இருப்பினும் காயத்தின் தன்மை பெரிதாக இல்லை என கூறப்படுகிறது. அணியின் மருத்துவர்கள் அவரை கண்காணித்து வருவதாகவும், முதல் டெஸ்ட் போட்டிக்கு இன்னும் 10 நாட்கள் இருப்பதால் அவர் அதற்கு முன் முழு உடற்தகுதியை எட்டி விடுவார் என்றும் கூறப்படுகிறது. இப்படி தொடர் ஆரம்பிப்பதற்குள் முன்னணி வீரர் காயத்தை சந்தித்திருப்பது அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து