முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் மம்முட்டி மகன் மீது போலீசார் விசாரணை

புதன்கிழமை, 31 ஜூலை 2013      சினிமா
Image Unavailable

 

கொச்சி, ஆக. 1 - மலையாள திரையுலகின் பிரபல நடிகரான மும்முட்டியின் மகன் பில்கர்சல்மான். இளம் நடிகரான இவர் சில மலையாள படங்களில் நடித்து பிரபலமடைந்து வருகிறார். தற்போது பந்தக்கடல் கவன்னபூமி என்ற மலையாள படத்தில் பில்கர் சல்மான் நடித்து வருகிறார். இந்த சினிமா பாடல் வெளியீட்டு விழா கொச்சியில் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் பில்கர் சல்மான் கலந்து கொண்டார். இதற்காக அவரை விழா நடக்கும் இடத்துக்கு மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக அழைத்து வந்தனர். இந்த ஊர்வலத்தில் பங்கேற்று மோட்டார் சைக்கிள் ஓட்டி சென்ற சல்மான் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்றார். அவரை பின்தொடர்ந்து 100 க்கும் மேற்பட்ட ரசிகர்களும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். போக்குவரத்து விதியை மீறி ஹெல்மெட் அணியாமல் நடிகர் சல்மான் ஹெல்மெட் அணியாமல் சென்றது பற்றி கொச்சி போக்குவரத்து போலீசாருக்கு புகார்கள் சென்றது. இது பற்றி கொச்சி போக்குவரத்து போலீசார் கூறும் போது ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டிய சல்மானிடம் விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்