முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக முன்னாள் கவர்னர் மரணம்

வியாழக்கிழமை, 11 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, ஆக.11 -    தமிழக முன்னாள் தலைமை செயலாளரும், கவர்னருமான பி.சி.அலெக்சாண்டர் மரணம் அடைந்ததிற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் டாக்டர் பி.சி.அலெக்சாண்டர் தனது 90-வது வயதில் நேற்று இயற்கை எய்தினால் என்ற செய்தியறிந்து நான் மிகுந்த துயரம் அடைந்தேன்.

டாக்டர் பி.சி.அலெக்சாண்டர், 1948 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக தனது பணியை துவக்கி, பல்வேறு உயர் பதவிகளை வகித்து, பின்னர் பொது வாழ்விலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் ஆவார். மத்திய அரசின் செயலாளராகவும்,  முன்னாள் பாரதப் பிரதமர் இந்திராகாந்தியின் முதன்மை செயலாளராகவும், இங்கிலாந்து நாட்டிற்கான இந்தியத் தூதுவராகவும், தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களின் ஆளுநராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் சிறப்புற பணியாற்றியவர். அவர் தமிழ்நாட்டின் ஆளுநராக பணியாற்றியபோது, இங்கே குடியரசுத் தலைவர் ஆட்சி ஏற்படுத்தப்பட்டு, திறம்பட நிர்வாகத்தை நடத்தியவர் ஆவார். இவர் பல்வேறு புத்தகங்களையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார். டாக்டர் அலெக்சாண்டரின் மறைவால் ஒருதலை சிறந்த நிர்வாகியை நாடு இழந்துவிட்டது.

டாக்டர் அலெக்சாண்டரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்