முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டம்: துணை முதல்வர் உதயநிதி அதிகாரிகளுடன் ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 20 மே 2025      தமிழகம்
DCM-1-2025-05-20

சென்னை , கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் பணி குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் உயர் நிலைக்குழுவின் ஆய்வுக் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது.

2025 – 2026-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிவிப்பின்படி கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் பணி குறித்து உயர் நிலைக்குழுவின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தின்கீழ் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து துணை முதல்வர் அரசு உயர் நிலைக் குழுவினருடன் ஆய்வு மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில்  துணை முதல்வர் உதயநிதி பேசுகையில், தொழில் நுட்பத் திறனில் உலக அளவில் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டினை உருவாக்கும் வகையில் 2025 – 2026-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலினின்  முக்கியத் திட்டங்களில் ஒன்றான இத்திட்டத்தை மாணவர்களிடம் விரைந்து கொண்டு சென்று சேர்த்திட அனைத்து அலுவலர்களும் தங்களுக்கான பணிகளை அர்பணிப்பு உணர்வுடன் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைமாற்றத்துறை அமைச்சர்  தங்கம் தென்னரசு, உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர. நா. முருகானந்தம்,சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர். பிரதீப் யாதவ்தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மைச் செயலாளர் பிரஜேந்திர நவ்நீத், உயர் கல்வித்துறை செயலாளர்  சமயமூர்த்தி, நிதித்துறைசெயலாளர் (செலவினம்) எஸ்.நாகராஜன், கல்லூரிக் கல்வி ஆணையர் திஎ.சுந்தரவல்லி,  தொழில் நுட்பக் கல்வி ஆணையர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து