முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேராசிரியரின் பணியிடை நீக்கம் ரத்து சரியே: உறுதி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 20 மே 2025      தமிழகம்
Chennai-high-court2

Source: provided

சென்னை : கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பேராசிரியரின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு சரியானதே என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பேராசிரியராக பணியாற்றி வந்த திருநாவுக்கரசு மீது  அவரது மருமகள் அளித்த வரதட்சணைக் கொடுமை புகாரின் பேரில் திருநாவுக்கரசு, அவரது மகன் உள்ளிட்டோருக்கு எதிராக செம்பியம்  போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை காரணம் காட்டி,  அவர் ஓய்வு பெறுவதற்கு 4 நாட்களுக்கு முன்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து திருநாவுக்கரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, குடும்பப் பிரச்சனை தொடர்பான வழக்கை காரணம் காட்டி பணியிடை நீக்கம் செய்ய முடியாது என்று கூறி, அவரது பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்து  உத்தரவிட்டார். 

இந்த உத்தரவை எதிர்த்து பல்கலைக்கழகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது நீதிபதிகள், "ஒரு பேராசிரியருக்கு எதிரானக் குற்றச்சாட்டு பல்கலைக்கழகத்தின் பொதுநலனுடன் தொடர்புடையது என்றால் மட்டுமே அவரை பணியிடை நீக்கம் செய்ய முடியும் என பல்கலைக்கழக விதிகளில் கூறப்பட்டுள்ள நிலையில், குடும்பப் பிரச்னை தொடர்புடைய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மனுதாரரை எந்த அடிப்படையில் பணியிடை நீக்கம் செய்ய முடியும்?  என கேள்வி எழுப்பினர்.

மேலும், மனுதாரரின் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு சரியானதே " என்று கூறி, பல்கலைக்கழகத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், மனுதாரருக்கு வழங்க வேண்டிய ஓய்வூதியப் பலன்களை 12 வாரங்களில் வழங்க வேண்டும் என்றும் பல்கலைக்கழகத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து