Idhayam Matrimony

தக் லைஃப் திரை விமர்சனம்

திங்கட்கிழமை, 9 ஜூன் 2025      சினிமா
Tak-Life-Review 2025-06-09

Source: provided

கமல்ஹாசன் குழுவினர் டெல்லியில் தாதாவாக வலம் வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு எதிரி. இரு தரப்புக்கும் இடையிலான மோதலில் சிம்புவின் அப்பா கொல்லப்படுகிறார். சிம்புவைக் வளர்க்கிறார் கமல். ஒரு கட்டத்தில் சிம்புவின் வளர்ச்சியைக் கண்டு கமலுக்கும் மற்றவர்களுக்கும் பொறாமை வருகிறது. இந்த பொறாமை வன்மாக உறுவெடுத்து துரோகமாக வளர்ந்து நிற்கிறது. அந்த துரோகத்தினால் கமலின் சாம்ராஜ்யம் சரிந்ததா? அல்லது துரோகிகளை அவர் சாய்த்தாரா? என்பதை சொல்லும் படந்தான் தக் லைஃப்’. ராயர் சக்திவேல் கதாபாத்திரம். தனது வசன உச்சரிப்பு மற்றும் சிறு சிறு எக்ஸ்பிரஷன்கள் மூலம் ரசிகர்களை கமல்ஹாசன் திருப்திப்படுத்த முயற்சித்திருந்தாலும், இந்த படத்தில் அவருக்கான களம் சரியாக அமையவில்லை. கமல்ஹாசனால் வளர்க்கப்படும் சிலம்பரசனுக்கு போட்டி போட்டு நடிக்க கூடிய வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. மாறாக ஆக்‌ஷன், திரிஷாவுடன் ஒன்சைடு ரொமான்ஸ் என்று தனது வேலையை சரியாக செய்திருக்கிறார். கதாநாயகர்களின் நாயகியாக நடித்திருக்கும் திரிஷா கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார். அபிராமி, நாசர், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், பகவதி பெருமாள் உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் சிறிய வேலை என்றாலும் அதை நிறைவாக செய்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் “ஜிங்குஜா ஜிங்குஜா...” பாடல் மட்டுமே ஆட்டம் போட வைப்பதோடு முணுமுணுக்க வைக்கிறது. கார் சேசிங் காட்சிகள் மிரட்டலாக எடுத்த ஸ்டண்ட் இயக்குநர் பாராட்டுக்குரியவர். திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் மணிரத்னம், தாதாக்களின் வாழ்க்கையையும், அவர்கள் எதிர்கொள்ளும் துரோகங்களையும் மையமாக வைத்து திரைக்கதை அமைத்திருந்தாலும், அதை அழுத்தமாக சொல்ல தவறியிருப்பது மிகப்பெரிய பலவீனம். படத்தில் ரசிக்கும்படியான அம்சங்கள் என்றால் ஒளிப்பதிவும் ஆக்‌ஷன் காட்சிகள் மட்டுமே. மொத்தத்தில், ‘தக் லைஃப்’ மணியின் மகுடத்தில் புதிதாக வைக்கப்பட்ட ஒரு சரளிக்கல்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து