எதிர்காலத்தில் நாடுகளுக்கு இடையே நல்ல தண்ணீரை பகிர்ந்து கொள்வதில்தான் மிகப்பெரிய சவால்கள் அடங்கியுள்ளதாக அடிக்கடி சூழலியலாளர்கள் எச்சரித்து வருகின்றனர். தற்போது பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரால் நமக்கு பயன் என்றாலும் பாவம் பூமி பந்து படாத பாடு படுகிறது. தற்போது அதற்கு முடிவு கட்ட வந்து விட்டது Ooho water. லண்டனை மையமாக வைத்து இயங்கி வரும் ஸ்கிப்பிங் ராக்ஸ் லேப் என்ற ஆய்வகம் கடற்பாசி மற்றும் தாவரங்களை பயன்படுத்தி திட வடிவிலான தண்ணீரை கண்டுபிடித்துள்ளது. இதனால் தண்ணீரை பாட்டிலில் அடைக்க வேண்டிய தேவை இருக்காது. மேலும் தாகம் எடுக்கும் போது இதை அப்படியே எடுத்து மெல்ல வேண்டியதுதான். பார்ப்பதற்கு நிறமற்ற நம்மூர் ஜவ்வுமிட்டாய் போல காணப்படும் இந்த Ooho வாட்டர் வாயில் போட்டதும் அப்படியே கல்கண்டாய் கரைந்து விடுகிறது. இயற்கையான முறைகளை பயன்படுத்தி தயாரிக்கப்படுவதால் மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தில்லை என்பது இதன் கூடுதல் சிறப்பு.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
பருவ நிலை மாற்றங்கள், புவி வெப்பமயமாதல் போன்றவற்றால் பூமி சுனாமி, சூறாவளி மற்றும் பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவுகளுக்கு உட்படுமாம். படிப்படியாக இதுபோன்ற அழிவுகளால் பூமி, 2100 ம் ஆண்டிற்குள் முற்றிலும் அழிவை சந்திக்கும் என மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. முதலில் கடல் இனங்கள் 95 சதவிகிதம் அழியும். இதைதொடர்ந்து, மற்ற இடங்களுக்கு பேரழிவு தொடருமாம். இதுவரை ஆர்டோவிசினியன், டெவோனியன், பெர்மியன் - ட்ராயாசிக், ஜூராஸிக், க்ரட்டாசியஸ் எனப்படும் 5 காலகட்டங்களில், உலகில் உள்ள உயிர்கள் 5 பேரழிவுகளைச் சந்தித்தது. இதற்கு இணையான ஒரு பேரழிவு வரும் 2100ம் ஆண்டுக்குள் நடக்கும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
உலகில் தற்சமயம் பயன்படுத்தப்படும் வைபை வேகத்தை விட 300 மடங்கு வேகமாக இண்டர்நெட் வேகம் வழங்கும் புதிய தொழில்நுட்பத்தை டட்சு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மின்சார கதிர்களை பயன்படுத்தி வயர்லெஸ் முறையில் தகவல்களை பரிமாற்றம் செய்யும் புதிய வழிமுறையை கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு கதிர்களும் அதிவேக திறன் கொண்ட சேனல் போன்று வேலை செய்கிறது. இந்த கதிர்கள் அனைத்தும் ஆப்டிக்கல் ஃபைபர் போன்று வேலை செய்கிறது. புதிய வயர்லெஸ் வழிமுறைகளின் முதற்கட்ட சோதனைகளில் நொடிக்கு 112 ஜிபி வேகத்தை வழங்குகிறது. இந்த வேகம் கொண்டு மூன்று எச்டி திரைப்படங்களை ஒரே நொடியில் முழுமையாக டவுன்லோடு செய்ய முடியுமாம்.
தாமஸ் ஆல்வா எடிசன் மிகப் பெரிய விஞ்ஞானி என்பது நமக்கு தெரியும். அவர் கண்டுபிடித்தவற்றின் பட்டியல் மிக நீளமானது. அதிகாரப்பூர்வமாக 1093 கண்டுபிடிப்புகளுக்கு அவர் காப்புரிமை பெற்றிருந்தார். அவற்றில் ஒன்று மின் விளக்கு. ஆனால் பெரும்பாலான வரலாற்றாய்வாளர்களின் கருத்துபடி அவர் பெரும்பாலான பிறரால் கண்டுபிடிக்கப்பட்டவற்றை தன்னுடையது என காப்புரிமை பெற்றதாக சொல்லப்படுகிறது. அதில் மின் விளக்கம் அடங்கும். ஏனெனில் அவர் மின் விளக்கை கண்டுபிடிப்பதற்கு 40 ஆண்டுகளுக்கு முன்பே இங்கிலாந்து வானியல் மற்று ரசாயன விஞ்ஞானி வாரன் டி லா ரூ என்பவர் அதை கண்டுபிடித்து விட்டார் என்பதுதான் ருசிகரமான தகவலாகும்.
நாள் முழுவதும் பணிபுரிய தற்போது போலீஸ் வேலையிலும் ‘ரோபோ’ ஈடுபட்டுள்ளது. உலகில் முதன் முறையாக துபாயில் ரோபோ போலீஸ் பணியில் ஈடுபட்டுள்ளது. அந்த ரோபோ துபாய் போலீஸ் சீருடை அணிந்துள்ளது. அது போலீஸ் அதிகாரிகளுடன் கைகுலுக்குகிறது. ராணுவ வீரர்கள் போன்று கம்பீரமாக சல்யூட் அடிக்கிறது. தெருக்களில் போலீசார் போன்று ரோந்து பணியும் செல்கிறது.
இந்தியாவில் தற்போது 780 மொழிகளில், 400 மொழிகள் அடுத்த 50 ஆண்டுகளில் அழிந்துவிடும் அபாயம் உருவாகியுள்ளது என தி பீப்பில்ஸ் லிங்குஸ்டிக் சர்வே ஆப் இந்தியா மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், ஒவ்வொரு மொழி அழியும்போதும், அந்த கலாச்சாரமும் அழியும் ஆபத்துள்ளதாக அது தெரிவிக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |