முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

நீல நிறத்தில் ஒளிரும் உறைபனி ரஷ்யாவில் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

உலகம் முழுவதும் உள்ள மிக உயர்ந்த சிகரங்களில் கண்ணை பறிக்கும் வெள்ளை நிறத்தில் உறைபனி இருப்பதை நம்மில் சிலர் நேரிலும், படங்களிலும் பார்த்திருப்போம். சுவிசாக இருந்தாலும், இமயமலையாக இருந்தாலும், துருவ பிரதேசமாக இருந்தாலும் பனி என்றாலே வெள்ளை நிறம் தான் என நாம் நம்பிக் கொண்டிருக்கும் நம்பிக்கை தகரப் போகிறது. ஆம், ரஷ்யாவில் உள்ள ஆர்டிக் பிரதேசத்தில் முதன் முறையாக நீல நிறத்தில் ஜொலிக்கும் பனியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

விண்வெளி ஆபத்து

விண்வெளிக்குச் செல்லும் வீரர்கள் வளர்சிதை மாற்றத்தால், அவர்களின் எலும்புகளின் அடர்த்தி குறையும். மேலும், எலும்புகள் கரைந்து அவர்களின் சிறுநீர் வழியாக வெளியேறும் என்பதால், அதை சேமித்து வைக்க அறிவுறுத்தப்படுகிறார். பூமிக்குத் திரும்பியவுடன் அந்த சிறுநீர் பல்வேறு ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்படும்.

ஆப்பிள்கள் ஓராண்டு கழித்தே விற்பனைக்கு வருகின்றன தெரியுமா?

சென்னை போன்ற பெருநகரங்களில் எந்த நாளிலும் எந்த நேரத்திலும் எந்த பழத்தையும் விலைக்கு வாங்கலாம். அதிலும் குறிப்பாக ஆப்பிள்கள் விற்காத சூப்பர் மார்க்கெட்களோ, ஸ்டோர்களோ இருக்க முடியாது. ஆனால் அவை பறித்து ஓராண்டு கழித்தே விற்பனைக்கு வருகின்றனவாம். ஆப்பிள்கள் பொதுவாக ஆகஸ்ட் தொடங்கி நவம்பர் மாதங்களில்தான் அறுவடை சீசன். அவை  பறிக்கப்பட்டு, வேக்ஸ் தடவி,் சூடான காற்றில் காய வைத்து குளீருட்டப்பட்ட பதப்படுத்தும் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. பின்னர் அவை பேக் செய்யப்பட்டு நம்மூர் சூப்பர் மார்க்கெட்களை அடைய 6 மாதம் முதல் 1 வருடம் வரை கூட ஆகுமாம். 

நம்பர் ஒன்

ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பயணிகளுக்காக விற்பனை செய்யப்படும் குடிநீர் குறித்து கன்சுமர் வாய்ஸ் என்ற பத்திரிக்கை மேற்கொண்ட ஆய்வில், இந்திய ரயில்வே சுற்றுலா மற்றும் உணவுக் கழகம் சார்பில் தயாரிக்கப்படும் “ரயில் நீர்“ என்ற சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அதிக அளவில் விற்பனை மற்றும் தரமும் நன்றாக உள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வசதி

விபத்தை தவிர்க்கும் வகையில், தானாக இயங்கக்கூடிய ஸ்கூட்டரை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். ஒரு நபர் மட்டுமே பயணிக்கக் கூடிய இந்த ஸ்கூட்டரில் நான்கு சக்கரம் உள்ளது.இதன் எடை 50 கிலோ ஆகும். அதிகபட்சமாக மணிக்கு 6 கி.மீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்த ஸ்கூட்டர் பயணிக்கும் போது இடையூறுகள் வந்தால் அதனை கண்டறிவதற்காக இதில் சென்சார்ஸ் பொருத்தப்பட்டுள்ளன.

பண்டைய காலத்தில் முகம் பார்க்கும் கண்ணாடி எது தெரியுமா?

இன்றைக்கு பெரும்பாலான பொருள்கள் கண்ணாடியால் செய்யப்படுகின்றன. ஆனால் பண்டைய காலத்தில் முகம் பார்ப்பதற்கு கண்ணாடியாக விளங்கியது எது தெரியுமா.. ஒரு அடர் வண்ணம் கொண்ட பாத்திரத்தில் மிகவும் அசையாத வகையில் நிரப்பப்பட்ட நீரிலேயே அக்கால மக்கள் தங்கள் முகங்களை பார்க்க பயன்படுத்தி வந்தனர். இதுவே முதன் முதலில் கண்ணாடியாக பயன்பட்ட பொருளாகும். இன்றைக்கும் பழைய கோயில்களில் நாம் கண்ணா.டி கிணறு என்பதை கேள்விப்பட்டிருப்போம் அல்லவா.. அதேப் போலத்தான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago