முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

வாய்ப்புண் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் | நாக்கில்புண் ஆற | பல் வலி தீர | தொண்டைக்கட்டு,தொண்டைகமறல் குணமாக

siddha-2

வாய்ப்புண் குணமாக ;--தேங்காய் பாலுடன் தேன் கலந்து பருகலாம்.

நாக்கில்புண் ஆற ;-- அகத்திஇலையை அலசி சுத்தம் செய்து குடிநீரில் போட்டு அவித்து அந்த ரசத்தை  3 வேளை சாப்பிடலாம்.

வாய்ப்புண்,வயிற்று புண் நீங்க ;-- மணத்தக்காளி கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிடலாம்.

வாய்ப்புண் ஆற ;-- காட்டாமணக்கு பாலை வாயில் கொப்பளிக்கலாம்.

வாய் உள்ரணம் குணமாக ;-- தேங்காய்பாலை தினமும் கொப்பளித்து குடித்து வரலாம்.

வாய் வேக்காடு திற ;-- திருநீற்றுப்பச்சிலையை மெல்லுவதால் குணமாகும்.

தொண்டைக்கட்டு,தொண்டைகமறல் குணமாக ;--  மா இலை பச்சை இலையை நெருப்பில் போட்டு வரும் புகையை வாய் திறந்து பிடிக்க குணமாகும்.

வாய்,நாக்கு புண்ணிற்கு ;-- பப்பாளிப்பாலை தடவலாம்.

வாய்ப்புண் ;-- ரோஜா இதழ்களை அப்படியே சாப்பிட்டால் குணமாகும்.

வாய் கசப்பு ;--முருங்கைபூவை பருப்புடன் சமைத்து உண்ணலாம்.

வாய்ப்புண்,பல் வலி தீர;--  கொள்ளுக்காய் மற்றும் வேளை வேரை  போட்டு கஷாயம் செய்து வாய் கொப்பளிக்கலாம்.

வாய்ப்புண் தீர;--  ரோஜாபூவை கஷாயம் செய்துகொப்பளிக்க தீரும்.

நாக்கு புண் குணமாக ;-- நெல்லி வேர்ப்பட்டை பொடி செய்து தேனில் கலந்து தடவ நாக்கு புண்  குணமாகும்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்