முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடுநிலைப்பள்ளிகளுக்கு 1,267 ஆசிரியர்கள் நியமனம் - ஜெயலலிதா

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜன.- 23 - தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்டுள்ள நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்ற 1,267 ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தமிழகத்திலுள்ள அனைத்து குழந்தைகளுக்கும்  தரமான கல்வி வழங்குவதே தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசின் நோக்கமாகும். குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, குழந்தைகள் கல்வி கற்க ஏதுவான ஒரு மகிழ்ச்சிகரமான சூழ்நிலையைப் ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவால் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அனைத்து மாணவ, மாணவியரும் இடைநிற்றல் இன்றி கல்வி கற்க ஏதுவாக அவர்களுக்கு புத்தகம், சீருடைகள், கல்வி கற்க உதவித் தொகை, மிதிவண்டிகள், மடிக்கணினி, போன்ற எண்ணற்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதில் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது என்பதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. எனவே தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு எல்லா பள்ளிகளிலும் தேவையான அளவு ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி பணி நியமனம் செய்து வருகின்றது. இதன் அடிப்படையில், அனைவருக்கும் கல்வி என்ற திட்டத்தின் கீழ் 2009-10 கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 831 நடுநிலைப் பள்ளிகளுக்கு ஒரு பட்டதாரி ஆசிரியர் வீதம், 831 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 2010​11 ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்த்ப்படட 218 நடுநிலைப் பள்ளிகளுக்கு, பள்ளி ஒன்றுக்கு 2 பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 436 பட்டத்தாரி ஆசிரியர் பணியிடங்களும், என மொத்தம் 1,267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை இந்த கல்வி ஆண்டிலேயே (2011​12) தோற்றுவிக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார்கள். மேலும், பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு அவர்கள் கல்வி கற்பதற்கு ஏற்றவகையிலான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் நோக்கத்தில், அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்குத் தேவையான சாய்வு மேசை, நீnullள் இருக்கை, மேசை மற்றும் நாற்காலி முதலான இருக்கை வசதிகளை ஏற்படுத்திட 36 கோடியே 17 லட்சம் ரூபாயினை ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago