எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,பிப்.- 13 - ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 1 வருடம் ஜெயில் தண்டனை விதிப்பதற்கான சட்டதிருத்தம் செய்யப்பட உள்ளது. தேர்தல் கமிஷனின் பரிந்துரையை ஏற்று இந்த திருத்தம் செய்யப்பட உள்ளது. தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணமோ, பொருளோ கொடுப்பதை தடுக்க மத்திய தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அப்படி இருந்தும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவது முற்றிலும் தடுக்கப்ப டவில்லை. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதையும், வாக்காளர்கள் அதை வாங்குவதையும் தடுக்கும் விதமாக தேர்தல் கமிஷன் புதிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதன்படி பணமோ அல்லது பொருளோ லஞ்சமாக வழங்கினால் அது கைது செய்வதற்கு உரிய குற்றம் என்று மத்திய அரசிடம் பரிந்துரை செய்துள்ளது. இதற்காக ஒரு ஆண்டு ஜெயில் தண்டனையோ அல்லது அபராதமோ விதிக்கப்படும். தேர்தல் கமிஷனின் இந்த பரிந்துரையை மத்திய சட்ட அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்காக சட்ட திருத்தம் செய்யப்படுகிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 123 (1) -வது பிரிவின்படி ஓட்டுக்கு பணம் வாங்குவது ஊழல் நடவடிக்கையாகும். 5 மாநில தேர்தல்களிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் கமிஷன் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டது. அதன்படி பஞ்சாபில் ரூ.12.13 கோடி பணமும், உத்தரகாண்டில் ரூ.1.35 கோடியும், மணிப்பூரில் ரூ.47 லட்சமும், கோவாவில் ரூ.36 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உத்தரபிரதேசத்தில் மட்டும் இதுவரை ரூ.53.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |


