எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஏப்.12 - இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு- மீள் குடியமர்த்தல் பற்றி அதிபருடன் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாலும், இலங்கை தமிழர்களுக்கு எதிரான செயல்களில் ராஜபக்ஷே அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாலும், இலங்கை செல்லும் இந்திய நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் அ.தி.மு.க. உறுப்பினர் ரபி பெர்னார்டு பங்கேற்க மாட்டார் என சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாக அறிவித்தார். நேற்று முதல்வர் ஜெயலலிதா 110 வது விதியின் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார். அதன் விபரம் வருமாறு:-
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது இடம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களை அந்த நாட்டில் மறு குடியமர்த்துவதற்காகவும், மறுவாழ்வு அளிப்பதற்காகவும், இந்திய நாட்டு உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டு பணிகளை பார்வையிடுவதற்காக, இம்மாதம் 16 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் 15 உறுப்பினர்கள் அடங்கிய இந்திய பாராளுமன்ற கூட்டுக் குழுவை இலங்கைக்கு மத்திய அரசு அனுப்ப முடிவு செய்து, அதில் அ.தி.மு.க. சார்பில் ஓர் உறுப்பினரை அனுப்புமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டது. மத்திய அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க, அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் வில்லியம் ரபி பெர்னார்டு அனுப்ப நான் முடிவு செய்தேன்.
இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையினரான சிங்களர்களுக்கு இணையாக முழு உரிமை பெற்ற குடிமக்களாக நடத்தப்பட வேண்டும் என்பதிலும், போரினால் இடம்பெயர நேர்ந்த தமிழர்களை அவர்கள் முன்னர் வசித்த இடத்திலேயே மீள்குடியமர்த்த வேண்டும் என்பதிலும் அ.தி.மு.க. உறுதியாக உள்ளது. எனவே தான், கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், இலங்கை உள்நாட்டுப் போரின் போது, மனிதாபிமானமற்ற முறையில் பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுவதற்குக் காரணமானவர்களை போர்க் குற்றவாளிகள் என்ற பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்றும்; இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரை மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தியப் பேரரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் இயற்ற நடவடிக்கை எடுத்தேன்.
இந்தத் தீர்மானத்தின் மீது மத்திய அரசு எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் சார்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தினை எதிர்த்து மத்திய அரசு செயல்படுவதாக இருந்தது. அமெரிக்காவின் தீர்மானத்தினை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து கடிதங்கள் மூலம் வலியுறுத்தியதை அடுத்து, இறுதி வரை அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவு அளிப்பதில் ஒரு தெளிவற்ற நிலையைக் கடைபிடித்த மத்திய அரசு, அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின் கடுமையை குறைத்து, அதை நீர்த்துப் போகச் செய்வதற்கான முயற்சிகளை எடுத்து, அதில் வெற்றியும் பெற்று அதன் பின் அந்தத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தது. இலங்கையில் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளை பெறுவதற்கு இது முதல் படியாக இருக்கும் என்பதால் அதற்கு நன்றி பாராட்டினேன்.
எனவே, இந்திய நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் இலங்கைப் பயணம் அங்குள்ள தமிழர்களுக்கு பயனளிப்பதாக இருக்கும், அவர்களோடு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாகச் கலந்துரையாடினால் அது தமிழர்களுக்கு ஆறுதலாகவும், உண்மை நிலவரங்களை தெரிந்துகொள்ள உதவும் என்றும் நம்பினேன். அவர்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள மறுவாழ்வு நடவடிக்கைகளை பார்வையிட்டு, அவற்றில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டவும் அது உதவும் என்ற எண்ணத்தில் தான் அ.தி.மு.க. சார்பில் ஓர் உறுப்பினரை அனுப்ப நான் சம்மதித்தேன். இந்தச் சூழ்நிலையில், இலங்கை பயணம் குறித்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் சுற்றுப்பயண நிகழ்ச்சி நிரல் தற்போது நாடாளுமன்ற கூட்டுக் குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது, போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் நேரிடையாக கலந்துரையாடவும், அவர்களின் உள்ளக் குமுறல்களை கேட்டு அறியவும் வாய்ப்பு இல்லாததாக அமைந்துள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்ஷே உட்பட சிங்கள அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடனான கூட்டங்கள் மற்றும் விருந்துகள் ஆகியவற்றிற்கே அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இந்த சுற்றுப்பயண நிகழ்ச்சி நிரலை பார்க்கும் போது, இது ஏதோ சம்பிரதாயத்திற்காக நடத்தப்படும் சுற்றுப் பயணம் போலவும், இது இலங்கை அரசால் அவர்களுக்கு சாதகமாக ஒரு கருத்து இந்தியாவில் எற்பட தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் போலவும் தான் தெரிகிறது. இது மட்டுமல்லாமல், இக்குழுவில் பத்திரிகையாளர்கள், மனித உரிமைகளில் ஆர்வம் உடையவர்கள், சுதந்திரமான கண்காணிப்பாளர்கள் யாரும் இடம் பெறாதது எனது ஐயத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இந்தக் குழுவின் பயணமும், ஏற்கெனவே தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி உள்ளிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு, இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுடன் விருந்துண்டு, பரிசுப் பொருட்களை பெற்றது போல் ஒரு கண்துடைப்பு ஏற்பாடாக ஆகிவிடும் என்று நான் கருதுகிறேன். ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் குழுவின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்காவின் மென்மையான தீர்மானத்தைக் கூட இலங்கை அதிபர் ராஜபக்ஷே ஏற்றுக் கொள்ள முன்வராத நிலையிலும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை ராஜபக்ஷே அரசு தடுத்து நிறுத்தாததாலும், தமிழகத்தில் நிறுவப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக சர்வதேச அணுமின் முகமையிடம் இலங்கை முறையிட உள்ளதாக செய்திகள் வந்துள்ளதன் அடிப்படையிலும், தமிழர்களுக்கு எதிரான செயல்களில் ராஜபக்ஷே அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாலும், இலங்கைத் தமிழர்கள் மீதான அணுகுமுறையில் இலங்கை அரசிடம் எந்தவிதமான மாற்றமும் தெரிய வராததாலும், இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு, மீள்குடியமர்த்தல் ஆகியவை பற்றியும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் நேரில் காணும் யதார்த்தங்களை பற்றியும் இலங்கை அதிபர் ராஜபக்ஷேயுடன் விவாதம் செய்ய வாய்ப்பு தரப்படாமல் சுற்றுப் பயணத்தின் கடைசி நாளில் அதிபர் ராஜபக்ஷேவுடன் காலை விருந்துக் கூட்டம் என்பது மட்டும் பயணக் குறிப்பில் இடம் பெற்றுள்ளது ஏமாற்றமளிக்கிறது என்பதாலும், இலங்கை செல்லும் இந்திய நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விலகிக் கொள்கிறது என்பதையும், இந்தக் கூட்டுக் குழுவில் அ.தி.மு.க.வை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் ரபி பெர்னார்டு பங்கேற்க மாட்டார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
சென்னை விமானநிலையத்தில் 10 விமானங்கள் ரத்து
08 May 2025சென்னை, சென்னை விமான நிலையத்தில் 10 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
ஸ்ரீநகர் உள்ளிட்ட 15 முக்கிய நகரங்களில் பாகிஸ்தான நடத்த இருந்த தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்தது இந்தியா
08 May 2025புதுடெல்லி: ஸ்ரீநகர், பதன்கோட், ஜலந்தர் உள்ளிட்ட இந்தியாவின் 15 நகரங்களில் பாகிஸ்தான் நடத்த இருந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக இந்திய பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.
-
திருச்சி மாவட்டம், துவாக்குடியில் 19.65 கோடி ரூபாய் மதிப்பில் அரசு மாதிரிப்பள்ளிக்கு புதிய கட்டிடம் * 18.91 கோடி ரூபாய் செலவில் விடுதிக் கட்டிடங்கள் * தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
08 May 2025திருச்சி: திருச்சி மாவட்டம், துவாக்குடியில் 19.65 கோடி ரூபாய் மதிப்பில் அரசு மாதிரிப்பள்ளிக்கு புதிய கட்டிடம் மற்றும் 18.91 கோடி ரூபாய் செலவில் விடுதிக் கட்டிடங்க
-
பாராளுமன்றத்தை கூட்ட ராகுல் காந்தி வலியுறுத்தல்
08 May 2025புதுடெல்லி, பாராளுமன்றக் கூட்டத்தொடரைக் கூட்ட வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
-
ரூ.60 ஆயிரம் கோடியில் தொழிற்கல்வி மேம்பாட்டு திட்டம்:மத்திய அமைச்சரவை ஒப்புதல்
08 May 2025புதுடெல்லி, சென்னை உள்ளிட்ட 5 நகரங்களில் தேசிய திறன் பயிற்சி நிறுவன மேம்பாட்டுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது
-
அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்காத பிரதமர் மோடி..!
08 May 2025டெல்லி, எல்லையில் ஏற்பட்டிருக்கும் போர்ப் பதற்றம் தொடர்பாக நேற்று (மே 8) நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்துகொள்ளவில்லை.
-
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தலைவர்கள் முதிர்ச்சியை வெளிப்படுத்தினர்: கிரண் ரிஜிஜு
08 May 2025புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து அரசியல் தலைவர்களும் முதிர்ச்சியை வெளிப்படுத்தியதாக நாடாளுமன்ற வி
-
இந்தியா - பாக். இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் அமெரிக்க அதிபர் அறிவிப்பு
08 May 2025வாஷிங்டன்: இந்தியா- பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-05-2025
09 May 2025 -
சென்னை வெற்றியால் நெருக்கடி: பிளே ஆப்-க்கு முன்னேறுமா கொல்கத்தா?
08 May 2025கொல்கத்தா, சென்னை வெற்றியால் கொல்கத்தாவின் பிளே ஆப் வாய்ப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை வெற்றி...
-
மத்திய அரசுக்கு முழு ஆதரவு: ராகுல் காந்தி
08 May 2025புதுடில்லி, மத்திய அரசுக்கு முழு ஆதரவு அளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
-
மனவலிமைதான் முக்கியம்: இளம் வீரர்களுக்கு தோனி அறிவுரை
08 May 2025சென்னை, தொழில்நுட்ப ரீதியாக திறமை வாய்ந்தவர்கள் எப்போதும் ரன்களை குவிப்பதில்லை. மனவலிமை முக்கியம் என எம்.எஸ்.தோனி கூறியுள்ளார்.
-
ஆபரேஷன் சிந்தூர் - சச்சின் வரவேற்பு
08 May 2025ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை வரவேற்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் சச்சின் வெளியிட்டுளள பதிவில் கூறியுள்ளதாவது: ஒற்றுமையில் நாம் அச்சமற்று இருக்கிறோம்.
-
ரூ.2 ஆயிரம் கோடி பத்திரங்கள் ஏலம்: தமிழக அரசு அறிவிப்பு
08 May 2025சென்னை, தமிழ்நாடு அரசு மொத்தம் ரூபாய் 2,000 கோடி மதிப்பில் 10 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ரூபாய் 1,000 கோடி மற்றும் 15 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ரூபாய் 1,000 கோடி ஏ
-
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி அரியலூர் மாவட்டம் முதலிடம்
08 May 2025சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை நேற்று (மே 8) காலை 9 மணிக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்.
-
மாணவர்களுக்கு ஆளுமைமிக்க நாற்காலி காத்து கொண்டிக்கிறது அமைச்சர் அன்பில் மகேஸ் பதிவு
08 May 2025சென்னை: மாணவச் செல்வங்கள் ஒவ்வொருவருக்கும் இவ்வுலகில் ஆளுமைமிக்க நாற்காலி காத்துக்கொண்டிக்கிறது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
-
பதற்றத்தை ஏற்படுத்தவில்லை: பதிலடி மட்டுமே இந்தியா கொடுக்கிறது: மத்திய அரசு
08 May 2025புதுடெல்லி, இந்தியா பதற்றத்தை ஏற்படுத்தவில்லை, பதிலடி மட்டுமே கொடுக்கிறது என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
-
சட்டப்பேரவை பேச்சை முழுமையாக வெளியிட்டால் தி.மு.க. ஆட்சி பாதாளத்துக்கு போய்விடும் - இ.பி.எஸ்
08 May 2025சேலம்: சட்டப்பேரவையில் நான் பேசுவதை முழுமையாக ஒளிபரப்பினால் திமுக ஆட்சி உடனடியாக அதல பாதாளத்துக்கு போய்விடும்.” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
ஜெய்சங்கருடன் சவுதி அமைச்சர் திடீர் சந்திப்பு
08 May 2025புதுடெல்லி: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் அடெல் அல்ஜுபை நேற்று (மே 8) இந
-
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து எடப்பாடிக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்
08 May 2025சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து எடப்பாடிக்கு ஆர்.எஸ் பாரதி பதில் அளித்துள்ளார்.
-
டெல்லியே திரும்பிப் பார்க்கும் அளவில் நம்முடைய மாதிரிப்பள்ளி முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
08 May 2025திருச்சி: டெல்லியே திரும்பிப் பார்க்கும் வகையில் நம்முடைய மாதிரிப் பள்ளி உருவாகியிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
புதிய இலக்கை நோக்கிச்செல்லுங்கள்: மாணவர்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து
08 May 2025சென்னை: பொதுத்தேர்வு தேர்ச்சி மட்டுமே வாழ்வின் எல்லாவற்றையும் முடிவு செய்திடாது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
-
போர்ப் பதற்றம் எதிரொலி: பஞ்சாப் - மும்பை போட்டி அகமதாபாத்துக்கு மாற்றம்
08 May 2025அகமதாபாத், போர்ப் பதற்றம் எதிரொலியால் பஞ்சாப் - மும்பை போட்டி அகமதாபாத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தான் திரைப்படங்கள்: ஓ.டி.டி. தளங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
08 May 2025புதுடெல்லி, ஓ.டி.டி.
-
இந்தியாவில் இணையசேவை: எலான் மஸ்க் நிறுவனத்துக்கு ஒப்புதல்
08 May 2025டெல்லி, இந்தியாவில் சேவையைத் தொடங்க ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.