முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி அரசியலுக்கு மோடி வர ஆர்.எஸ்.எஸ். பச்சைக்கொடி?

வெள்ளிக்கிழமை, 18 ஜனவரி 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜன.19 - அகில இந்திய அளவில் அரசியலுக்கு வர குஜராத் முதல்வர் மோடிக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பச்சைக்கொடி காட்டலாம் என்று தெரிகிறது. இதனையொட்டி பா.ஜ.வில் நரேந்திர மோடி முக்கிய பங்கு வகிக்கலாம். குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க. முதல்வராக இருக்கும் நரேந்திர மோடி அந்த மாநிலத்தில் தொடர்ந்து 3 முறையாக முதல்வராக பதவி வகித்து வருகிறார். மாநிலத்தில் தொழில்வளத்தை பெருக்கி வருகிறார். அவருக்கு தொழில் அதிபர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். அதனால் அவரை பாரதிய ஜனதா கட்சியில் தேசிய அளவில் ஈடுபடுத்துவது குறித்து கட்சியில் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. கட்சியில் யாருக்கும் முக்கியப் பொறுப்பு கொடுக்க வேண்டுமென்றால் அதன் தாய்களமான ஆர்.எஸ்.எஸ். இயக்கதின் ஆதரவும் சம்மதமும் வேண்டும். ஆர்.எஸ்.எஸ். தயவால்தான் நிதீன்கட்காரி இன்னும் தலைவராக இருக்கிறார். அதேமாதிரி நரேந்திரமோடிக்கும் தேசிய அளவில் முக்கியப்பொறுப்பு கொடுப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. வருகின்ற 2014-ம் ஆண்டு பொதுத்தேர்தலில்  நரேந்திர மோடி தலைமை தாங்கவும் டெல்லி அரசியலுக்கு வரவும் முதலில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திலும் எதிர்ப்பு இருந்தது. இந்த எதிர்ப்பு தற்போகு மாறி ஆதரவு பெருகி உள்ளது. அதனால் டெல்லி அரசியலுக்கு மோடி வருவது தவிர்க்க முடியாதது என்று கூறப்படுகிறது. இனி டெல்லி அரசியலுக்கு மோடி எப்போது வரப்போகிறார், அவருக்கு கட்சியில் என்ன பொறுப்பு கொடுக்கப்படும் என்பதுதான் இனி கேள்வியாக இருக்கிறது. அதேசமயத்தில் வருகின்ற லோக்சபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக தன்னை அறிவிக்க இருக்கும் தடைகளை நீக்கும்வரை காந்திநகர் அரசியலிலேயே இருக்க மோடி விரும்புவதாகவும் தெரிகிறது.

குஜராத் மாநிலத்தில் பாரதிய ஜனதாவை 3-வது முறையாக வெற்றிபெறச்செய்து தொடர்ந்து முதல்வராக இருக்கும் நரேந்திர மோடிக்கு ஆதரவாக கட்சியில் கோஷங்கள் எழுந்தவண்ணம் உள்ளன. 2012-ல் மோடி முதல்வர், வரும் 2014-ம் ஆண்டில் மோடி பிரதமர் என்ற கோஷம் பலமாக ஒலிக்கத்தொடங்கிவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago