எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ராமநாதபுரம்,ஏப்.7 - பரமக்குடியில் சொத்து தகராறில் கூலிப்படையினர் மூலம் பா.ஜ.க. பிரமுகர் பைப்வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ்சுவரன் கோவில் தெருவை சேர்ந்தவர் கதிரேசன் என்பவரின் மகன் முருகன்(வயது46). முன்னாள் பா.ஜ.க. கவுன்சிலரான இவர் வாஜ்பாய் மன்ற தலைவராக இருந்து வந்தார். தேங்காய் கடை வைத்து நடத்திவந்த இவர் கடந்த 19-ந் தேதி மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களால் பைப்வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் ராமநாதபுரம் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி.ராமசுப்பிரமணி, போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் ஆகியோர் உத்தரவின் பேரில் உதவி போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் தலைமையில் தனிபோலீஸ் படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் முருகன் கொலைசம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்திவந்தனர். இந்த விசாரணையில் சொத்து பிரச்சனை தொடர்பாக கொலை நடந்துள்ளது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர புலன்விசாரணை நடத்தி தற்போது சென்னை டி.நகரில் வசித்துவரும் பரமக்குடி நாகூர்கனி என்பவரின் மகன் ராஜாமுகம்மது(58), பரமக்குடி திருவள்ளுவர் நகர் முத்துவயல் முத்துச்சாமி மகன் மனோகரன்(41), மதுரை காயிதேமில்லத்நகர் சுல்த்தான் அலாவுதீன் மகன் வாழைக்காய் என்ற ரபீக்ராஜா(35), மதுரை தாசில்தார் பள்ளிவாசல் தெரு அகம்மது என்பவரின் மகன் சாகுல்ஹமீது(37) ஆகிய 4பேரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் ராமநாதபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- கொலை செய்யப்பட்ட முருகனின் தாத்தா சிவஞானம் செட்டியாருக்கு வைகை நகர் பகுதியில் 6ஏக்கர் நிலம் இருந்துள்ளது. அவர் இறந்தபின்னர் மகன் கதிரேசன் செட்டியார் அந்த நிலத்தை பராமரித்து வந்துள்ளார். அப்போது, பரமக்குடி வேந்தோனி கிராமத்தை சேர்ந்த ராஜபாண்டி என்ற ராஜாமுகம்மது மேற்கண்ட சொத்தை தனது அக்காள் மகன் மனோகரன் பெயரில் போலி பத்திரம் தயாரித்து சொந்தம் கொண்டாடி வந்துள்ளார். இதுதொடர்பாக தொடாரப்பட்ட வழக்கில் கதிரேசன் செட்டியாருக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராஜாமுகம்மது கதிரேசன் செட்டியார் குடும்பத்தினர் மீது விரோதம் கொண்டு இருந்துள்ளார். மேலும், மேற்கண்ட சொத்தினை கதிரேசன் செட்டியாரின் மகன்களான கொலைசெய்யப்பட்ட மருகன் மற்றும் அவரின் தம்பி சிவக்குமார் ஆகியோர் விற்க முயலும்போதெல்லாம் ராஜாமுகம்மது மிரட்டல் விடுத்து வந்ததோடு, வாங்குபவர்களையும் தடுத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 14-ந் தேதி மேற்கண்ட சொத்தினை முருகன், சிவக்குமார் ஆகியோர் மதுரை மேலூரை சேர்ந்த ராஜாரபீக் என்ற ராஜாபாய் என்பவரிடம் ரூ.8கோடி அளவிற்கு விற்பனை செய்துள்ளனர். இதுபற்றி அறிந்த ராஜாமுகம்மது இதுதொடர்பாக பிரச்சனை ஏற்படுத்தாமல் இருக்க தனக்கு ரூ.ஒரு கோடியே 50லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இதற்கு முருகன், சிவக்குமார் ஆகியோர் ரூ.85லட்சம் கொடுத்துள்ளனர். கேட்ட தொகை கிடைக்காததால் ஆத்திரமடைந்த ராஜாமுகம்மது தனது அக்கா மகன் மனோகரன் என்பவருடன் சேர்ந்து மதுரையை சேர்ந்த கூலிப்படையினர் மூலம் முருகனை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார். இதன்படி மேற்படி மதுரையை சேர்ந்த கூலிப்படையினர் வாழைக்காய் என்ற ரபீக்ராஜா, சாகுல்ஹமீது மற்றும் இன்னொருவர் மூலம் கொலை திட்டத்தை கனகச்சிதமாக நிறைவேற்றி உள்ளனர். இதற்காக ராஜாமுகம்மது கூலிப்படையினருக்கு ரூ.2லட்சம் வழங்கி உள்ளார். கொலை சம்பவம் நடந்ததும் இதற்கான காரணம் குறித்து விசாரித்தபோது ராஜாமுகம்மதுவின் பிரச்சனை தெரியவந்தது. இதுதொடர்பாக முதலில் சிக்கிய அவரின் மருமகன் மனோகரனை பிடித்து விசாரித்தபோது மேற்கண்ட தகவல்கள் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் மேற்கண்ட 4பேரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் கூலிப்படையினரின் மூளையாக செயல்பட்ட மதுரையை சேர்ந்த கூலிப்படைதலைவன் ஒருவனை தேடிவருகிறோம். இவ்வாறு கூறினார். கைது செய்யப்பட்ட 4பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
காட்டிக்கொடுத்த ரெயில் டிக்கெட்:
முருகனை கொலை செய்ய கூலிப்படையினர் மூலம் சதித்திட்டம் போட்ட ராஜாமுகம்மது தன்மீது போலீசாருக்கு சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக சென்னையில் இருப்பதுபோன்று காட்டுவதற்கு தன்பெயரில் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார். போலீசாரின் இந்த விசாரணையில் அவர் சம்பவம் நடந்தபோது சென்னையில் இல்லை என்பதும், முன்பதிவு செய்த ரெயிலில் பயணம் செய்யவில்லை என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசாரின் பிடியில் ராஜாமுகம்மது வசமாக சிக்கி உள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள வாழைக்காய் என்ற ரபீக்ராஜா பைப் வெடிகுண்டு வீசி கொலை செய்வதில் கைதேர்ந்தவன். மேலும், பிரபல பைப் வெடிகுண்டு குற்றவாளி போலீஸ் பகுர்தீன் என்பவருடன் சேர்ந்து பல்வேறு குற்றசம்பவங்களில் ்டுபட்டுள்ளார். கூலிப்படையினர் முருகனை கொலைசெய்ய வீசிய 3பைப் வெடிகுண்டுகளில் ஒன்று மட்டுமே வெடித்துள்ளது. வெடிக்காத 2பைப் வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-05-2025
11 May 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-05-2025
11 May 2025 -
தமிழ்நாட்டில் வரும் 14, 15ம் தேதிகளில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
11 May 2025சென்னை : தமிழகத்தில் வரும் மே 14,15ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
அன்னையர் தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
11 May 2025சென்னை : நாடு முழுவதும் நேற்று (மே 11) அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.
-
தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது : பிரதமர் மோடி பெருமிதம்
11 May 2025புதுடெல்லி : தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணி நாடாக வளர்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்
-
பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் தமிழ்நாடு முதலிடம் : தமிழக அரசு பெருமிதம்
11 May 2025சென்னை : பொருளாதார வளர்ச்சி, உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை, தொழில் ஒப்பந்தங்கள், மின்னணு ஏற்றுமதி, வேலைவாய்ப்புகளை வழங்குதல் என பலவற்றில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிட
-
5 நாட்கள் பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
11 May 2025ஊட்டி : 5 நாட்கள் பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அவர் வரும் 15-ம் தேதி அங்கு மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.
-
தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் அடுத்த வாரம் சிவில் பாதுகாப்பு ஒத்திகை
11 May 2025சென்னை : தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் அடுத்த வாரம் சிவில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: பிரதமருக்கு கார்கே, ராகுல் மீண்டும் கடிதம்
11 May 2025புதுடெல்லி : பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க உடனடியாக பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி ஆகி
-
ஆபரேஷன் சிந்தூர் இந்திய ராணுவ உறுதியின் சின்னம் : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
11 May 2025லக்னோ : ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் அரசியல், சமூக மற்றும் ராணுவ மனஉறுதியின் சின்னம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
-
இந்தியா - பாக். போர் நிறுத்தம் எதிரொலி: எல்லையில் மெதுவாகதிரும்பும் இயல்புநிலை
11 May 2025புதுடெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே நேற்று முன்தினம் மாலை போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.