முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புற நோயாளிகள் பிரிவில் 29 கண்காணிப்பு கேமிராக்கள்

செவ்வாய்க்கிழமை, 4 ஜூன் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.5 - சென்னை அரசு பொது மருத்துவமனையை 24 மணி நேர கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்படுவதற்காக 29 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது. ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவிற்கு விபத்தில் காயமடைந்தோர் அதிக எண்ணிக்கையில் வரும்போது அவர்களுடன் நோயாளி உறவினர்களும் அதிக எண்ணிக்கையில் வருவதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் குழப்பம் ஏற்படுகிறது. அதனால் அவசர சிகிச்சைப் பிரிவு வார்டுகளில் பாதுகாப்பு நலன் கருதி கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் 27 காவலர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டனர்

32 கண்காணிப்புக் கேமிராக்கள் டிஜிட்டல் காட்சிப் பதிவு செய்யும் கருவியுடன் பொருத்தப்பட்டன. அதில் 3 மாதம் வரை காட்சிகளை சேமிக்க முடியும். தற்போது புற நோயாளிப் பிரிவில் தினமும் 12 ஆயிரம் புறநோயாளிகளும், அதற்கு நிகரான அளவுள்ள உதவியாளர்களும் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை வந்து செல்கிறார்கள். அதனால் அதிக பாதுகாப்பு கருதி புறநோயாளி பிரிவில் 29 கண்காணிப்பு கேமிராக்கள் டிஜிட்டல் காட்சிப் பதிவு கருவிகளுடன் பொருத்தப்பட்டன.

10 கேமிராக்கள் புற நோயாளிப் பகுதியின் உட்புறத்திலும், மீதமுள்ள 19 கேமிராக்கள் வெளிப் பகுதியிலும் அதாவது மருந்தகம், புறநோயாளிப் பிரிவு பதிவு செய்யும் பகுதி, சி.டி. ஸ்கேன் பகுதி, பணம் கட்டும் பிரிவு மற்றும் செல்லும் வழியில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமிராக்கள் பொருத்த மொத்த செலவு ரூ. 5 லட்சம் ஆகும்.

இதுகுறித்து டீன் கனகசபை கூறியதாவது:-

புற நோயாளிகள் பிரிவில் செல்போன் உள்ளிட்ட பொருட்கள் திருடு போகின்றன. அவற்றை கண்காணிப்பதற்காக 29 கேமிராக்கள் பொறுத்தப்படுகின்றன. இதுதவிர மேலும் 2 பெரிய கேமிராக்களும் பொருத்தப்படுகின்றன. திருட்டை தடுக்கவும், சமூக விரோத செயல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் இந்த நவீன கேமிராக்கள் உதவியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago