முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈராக்கில் கார் வெடிகுண்டு தாக்குதலில் 23 பேர் பலி

புதன்கிழமை, 23 ஜூலை 2014      உலகம்
Image Unavailable

 

பாக்தாக், ஜூலை.24 - பாக்தாக் நகரில் சன்னி பிரிவு தற்கொலை படை தீவிரவாதிகளின் கார் வெடிகுண்டு தாக்குதலில் 23 பேர் பலியானார்கள். மேலும் 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் என்று ஈராக் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஈராக் தலைநகர் பாக்தாத்துக்கு வடமேற்கே ஷியா பிரிவு முஸ்லிம்ள் அதிகம் வசிக்கும் காதிமியா பிராந்தியம் அமைந்துள்ளது. இங்கு உள்ள போலீஸ் சோனை சாவடி ஒன்றில் நேற்று முன்தினம் காலை வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் வேகமாக வந்தது. அந்த காரை ஈராக் போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது காரில் இருந்த தற்கொலை படை தீவிரவாதி காரை வெடிக்க செய்தான். இந்த வெடிகுண்டு தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 5 போலீசார் உள்பட 20 பேர் பலியானார்கள்.

மேலும் 8 போலீசார் உள்பட 32 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தற்போது ஈராக்கில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு சன்னி பிரிவினர் ஆதரவு அளித்து வருகின்றனர். இதனால், ஷியா பிரிவினர் வசிக்கும் பகுதிகளில் அடிக்கடி வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்று வருகின்றன.

ஷியா பிரிவினரும் பதிலடி தாக்குதல் கொடுத்து வருகின்றனர். சன்னி பிரிவினர் வசிக்கும் நஹ்ராவான் நகரில் மார்க்கெட் பகுதியில் தற்கொலை படையின் கார் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலில் 3 பேர் பலியானார்கள். மேலும், 8 பேர் படுகாயம் அடைந்தனர் என்று ஈராக் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

தலைநகர் பாக்தாத்தை கைப்பற்றும் நோக்கத்துடன் தீவிரவாதிகள் முன்னேறி வருவதால் அப்பகுதியில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்