முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இ.பிரதேசத்தில் இடைத்தேர்தல் வர வாய்ப்பில்லை: முதல்வர்

ஞாயிற்றுக்கிழமை, 14 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

ஹமீர்பூர், செப் 15 - இமாச்சல பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு ஸ்திரமாக இருப்பதாக கூறியுள்ள முதல்வர் வீரபத்ரசிங் மாநில சட்டப் பேரவைக்கு இடைத் தேர்தல் வர வாய்ப்பில்லை என்று தெரிவித்தார். இது தொடர்பாக ஹமீர்பூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

எனது தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மை பலத்தை பெற்றுள்ளது. நாங்கள் 5 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்வோம். மாநில அரசின் ஸ்திரத்தன்மையை கண்டு விரக்தியடைந்துள்ள பாஜக தலைவர்கள் பரப்பி வருகின்றனர். பாஜக தலைவரும், மாநில முன்னாள் முதல்வருமான பிரேம்குமார் துமல், அவரது மகனும் எம்பியுமான அனுராக் கௌரி ஆகியோர் எனக்கு எதிராக அவதூறு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் தீய எண்ணங்கள் நிறைவேறாது. துமல் தலைமையிலான முந்தைய பஜக அரசு பொய் வழக்குகளில் என்னை சிக்க வைக்க முயற்சித்தது. ஆனால் நீதிமன்றங்கள் என்னை நிரபராதி என்று அறிவித்ததால் எந்தவித பாதிப்புமின்றி அந்த வழக்குகளில் இருந்து வெளிவந்து விட்டேன். மாநிலத்தில் பாஜக தலைவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த அனைத்து வழக்குகளிலும் விசாரணை நடத்தப்படும் என்று தேர்தலின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சித்து கொண்டிருக்கிறேன் என்று வீரபத்ரசிங் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்