முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை - திருநெல்வேலியில் சிறப்பு பாஸ்போர்ட் மேளா

புதன்கிழமை, 26 நவம்பர் 2014      வர்த்தகம்
Image Unavailable

மதுரை - மதுரை மற்றும் திருநெல்வேலியில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையங்களில் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களின் வசதிக்காக வரும் 29ம் தேதி பாஸ்போர்ட் மேளா நடத்தப்படுகிறது.
மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் தாங்கள் விரும்பும் பாஸ்போர்ட் சேவை மையங்களில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
இந்த சிறப்பு மேளாவிற்காக மதுரை சேவை மையத்திற்கு 755 முன்பதிவும், திருநெல்வேலியில் 450 முன்பதிவும், ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு மேளாவில் விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைனில் பதிவு செய்து முன்பதிவு தேதி பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் விண்ணப்ப பதிவேட்டு எண்ணுடன்(ஏஆர்என்) மதுரை அல்லது திருநெல்வேலி பாஸ்போர்ட் சேவை மையத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இது தொடர்பான விவரங்களுக்கு மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தை 0452-2520795 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மண்டல பாஸ்போர்ட் அலுவலர் எஸ். மணீஸ்வரராஜா இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து