முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலை ஒரே நாளில் 3-வது முறை அதிகரித்தது

வெள்ளிக்கிழமை, 10 மே 2024      தமிழகம்
Gold 2024-04-06

Source: provided

சென்னை : அட்சய திருதியை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் தங்கம் விலை 3-வது முறை அதிகரித்து விற்பனையானது.

சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியை, அட்சய திருதியை என்று போற்றப்படுகிறது. அட்சயம் என்றால் அள்ள அள்ள குறையாத அல்லது தேயாத என்று பொருள். 

இந்த ஆண்டு அட்சய திருதியை திதி நேற்று (மே 10) காலை 4.17 மணிக்கு தொடங்கி இன்று (மே 11) மதியம் 2:50 மணிக்கு முடிவடைகிறது. இந்த நாளில் வாங்கப்படும் எந்த பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் இந்த நாளில் தங்கத்தை வாங்குவதற்கு விரும்புகின்றனர்.

அட்சய திருதியை தினமான நேற்று காலையிலேயே இரண்டு முறை தங்கம் விலை உயர்ந்தது. காலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்த நிலையில், சிறிது நேரத்தில் மீண்டும் ரூ.360 அதிகரித்து உயர்ந்து ரூ.53,640-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு இருமுறை தலா ரூ.45 உயர்ந்து ரூ.6,705-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் நேற்று ஒரே நாளில் 3-வது முறையாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.520 அதிகரித்து 54,160க்கும், கிராமுக்கு ரூ.65 உயர்ந்து 6,770க்கும் விற்பனையானது. வெள்ளி விலை மீண்டும் கிராமுக்கு 1.20 உயர்ந்து 91.20க்கு விற்பனையானது. தங்கம் விலை நேற்று ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.1,240 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து