முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: புதுச்சேரியில் 89.14 சதவீதம் தேர்ச்சி

வெள்ளிக்கிழமை, 10 மே 2024      தமிழகம்
10-th 2024-03-26

Source: provided

புதுச்சேரி : 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் புதுச்சேரியில் 89.14 சதவீதம் தேர்ச்சி பேர் பெற்றுள்ளனர்.

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 14,952 மாணவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதினர். அவர்களில் 13,328 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மொத்த தேர்ச்சி சதவிகிதம் 89.14, அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவிதம் 78.08 ஆகும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியின் மொத்த தேர்ச்சி விகிதம் கடந்தாண்டைவிட இந்தாண்டு அதிகரித்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 90 எனவும், காரைக்காலில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 17 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய 9 லட்சம் மாணவ, மாணவிகளில் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து