முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலவரத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது: இம்ரான் கான் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 10 மே 2024      உலகம்
Imran-Khan-2024-05-09

Source: provided

இஸ்லாமாபாத் : கடந்த ஆண்டு மே 9-ம் தேதி நடந்த கலவர சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று இம்ரான்கான் திட்டவட்டமாக தெரிவித்தார். 

பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் தலைவர் இம்ரான் கான் பிரதமர் பதவி வகித்த போது பல ஊழல்களில் ஈடுபட்டதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு மே 9-ம் தேதி இம்ரான் கான் கைது செய்யப்பட்டபோது தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். 

ராவல்பிண்டியில் உள்ள ராணுவ அலுவலகம்,மியான்வலி விமான படை தளம், பைசலாபாத் ஐ.எஸ்.ஐ கட்டிடத்திற்குள் புகுந்து இம்ரானின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த வன்முறை தொடர்பாக அரசாங்க ரகசிய சட்டத்தின் கீழ் இம்ரான் மற்றும் அவரது கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன் ஐ.எஸ்.ஐ.யின் தலைமை செய்தி தொடர்பாளர் பேட்டியளிக்கையில்,

 மே 9-ம் தேதி வன்முறைக்கு காரணமானவர்கள் தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டால்தான் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று கூறினார். 

அல் காதிர் அறக்கட்டளை வழக்கு விசாரணை தொடர்பாக இம்ரான்கானை அடியாலா சிறையில் போலீசார் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தினர். அதன் பின்னர் வெளியே வந்த இம்ரான்கான் பேட்டியளித்தார். அப்போது கலவரத்துக்கு மன்னிப்பு கேட்பீர்களா என்று கேட்ட போது, கலவரம் நடந்த போது போலீஸ் காவலில் இருந்தேன். அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இதனால் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து