முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விராட் கோலி புதிய சாதனை

வெள்ளிக்கிழமை, 10 மே 2024      விளையாட்டு
Virat-Kohli 2023-10-02

Source: provided

ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 241 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 92 ரன்களும், ரஜத் படிதார் 55 ரன்களும் குவித்தனர்.

முன்னதாக இந்த ஆட்டத்தில் விராட் கோலி 74 ரன்கள் அடித்திருந்தபோது ஐ.பி.எல். வரலாற்றில் பஞ்சாப் அணிக்கு எதிராக 1000 ரன்களை கடந்தார். இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் 3 அணிகளுக்கு எதிராக 1000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

_____________________________________________________

ஜெய்ஸ்வால், கில்லுக்கு மாற்று வீரர்

ஐ.பி.எல். தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஐதரபாத் அபார வெற்றிப்பெற்றது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 89 ரன்களும், அபிஷேக் சர்மா 75 ரன்களும் அடித்தனர். இந்நிலையில் இந்த ஆட்டம் மட்டுமின்றி நடப்பு ஐ.பி.எல். சீசனில் சிறப்பாக செயல்பட்டு வரும் அபிஷேக் சர்மா டி20 உலகக்கோப்பை முடிந்ததும் இந்திய கிரிக்கெட் அணியில் இருப்பார் என்று ஆர்.சி.பி. அணியின் முன்னாள் பயிற்சியாளரான மைக் ஹெசன் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோருக்கு போட்டியாக அபிஷேக் வருவார் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"பவர் பிளே ஓவர்களில் ஸ்பின்னர்களை அடிக்கும் திறமை அவரிடம் இருக்கிறது. வேகத்திற்கு எதிராகவும் அவர் பெரியளவில் முன்னேற்றத்தை சந்தித்துள்ளார். தரமான வீரரான அவர் பவுண்டரி மற்றும் சிக்சர்களை அடிக்கக் கூடியவர். எனவே உலகக்கோப்பை முடித்ததும் அவர் இந்திய அணியில் இடம்பெறுவார். குறிப்பாக ஜெய்ஸ்வால் அல்லது சுப்மன் கில் ஆகியோரின் இடங்களில் அவர் மாற்றத்தை ஏற்படுத்தலாம். நியாயமாக பேச வேண்டுமெனில் இந்திய அணியில் நிறைய பெயர்கள் உள்ளன. ஆனால் அவர்களையெல்லாம் தாண்டி அபிஷேக் சர்மா இந்திய அணியில் ஒருவராக இருப்பார்" என்று கூறினார்.

_____________________________________________________

தெரியவில்லை: டேவிட்  வார்னர்

நீண்ட ஆண்டுகளாக சன்ரைசர்ஸ் அணியுடன் இருந்து வந்த அவருக்கு ஐதராபாத் அணியை சேர்ந்த ரசிகர்கள் மிகப்பெரும் ஆதரவை இன்றளவும் அளித்து வருகின்றனர். ஆனால் கடந்த 2021-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் முதல் ஐந்து போட்டிகளில் படுதோல்வியை சந்தித்த பிறகு டேவிட் வார்னர் அந்த அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதோடு சேர்த்து பிளேயிங் லெவனில் இருந்து வெளியேற்றப்பட்டு டக் அவுட்டில் அமர வைக்கப்பட்டார். அதோடு அந்த ஆண்டு நடைபெற்ற தொடரோடு சன்ரைசர்ஸ் அணியால் ஓரங்கட்டப்பட்டார். அதனை தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் சன்ரைசர்ஸ் அணியின் நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்டது குறித்து எமோஷனலாக பேசியுள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், "சன்ரைசர்ஸ் அணியின் நிர்வாகம் என்னை சமூக வலைதளத்தில் பிளாக் செய்தது அதிகமாக காயப்படுத்தியது. மேலும் என்னை விட எனது ரசிகர்கள் காயப்பட்டு இருப்பார்கள் என்று நினைக்கிறேன். என்னுடைய மிக முக்கியமான ஒரு உறவு என்றால் ரசிகர்கள் உடனான எனது பிணைப்புதான். ஐதராபாத் ரசிகர்கள் என்னுடன் அவ்வளவு பிணைப்பாக இருந்தார்கள். ஆனால் அந்த நேரத்தில் சன்ரைசர்ஸ் அணியின் நிர்வாகம் என்னை பிளாக் செய்தது ஏன்? இப்படி ஏன் செய்தார்கள்? எதற்காக இப்படி நடந்து கொண்டார்கள்? என்பது இன்றளவும் எனக்கு தெரியவில்லை இருந்தாலும் என்னை நேசிக்கும் ரசிகர்கள் இன்றளவும் இருந்து வருகிறார்கள்" என்று கூறினார்.

_____________________________________________________

கலீல் அகமது மகிழ்ச்சி

கடந்த நான்கரை ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாட முடியாமல் இருந்தது தினம் தினம் மனப் போராட்டமாக இருந்ததாக உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள கலீல் அகமது தெரிவித்துள்ளார். 26 வயதாகும் கலீல் அகமது டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரிசர்வ் வீரர்களில் ஒருவராக இடம்பெற்றுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் தில்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடி வரும் கலீல் அகமது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

இந்த நிலையில், இந்திய அணிக்காக விளையாட முடியாமல் இருந்த ஒவ்வொரு நாளும் மனப் போராட்டமாக இருந்ததாக கலீல் அகமது தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.  இது தொடர்பாக தில்லி கேப்பிடல்ஸின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலீல் அகமது பேசியதாவது: கடந்த சில மாதங்களாக நடந்த விஷயங்களும், இந்த ஐபிஎல் தொடர் தொடங்கிய விதமும் ஏதோ நல்லது நடக்கப் போகிறது என்ற உள்ளுணர்வை எனக்குக் கொடுத்தது. ஐபிஎல் போட்டிகள் செல்ல செல்ல எனது நம்பிக்கை மேலும் வளர்ந்தது. நான் நன்றாக பந்துவீசுவதை உணர்ந்தேன். எனது பெயர் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். இதனை எனக்கு கிடைத்த முன்னேற்றமாக நினைக்கிறேன் என்றார்.

_____________________________________________________

ஷபாலி வர்மா சாதனை

வங்காளதேசம் - இந்திய மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வங்காளதேசத்தில் நடைபெற்று முடிந்தது. இதில் முதல் 4 போட்டிகளிலும் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று தொடரில் 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது டி20 போட்டியானது சில்ஹெட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய வங்கதேச மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்ன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

இதன்மூலம் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி முழுவதுமாக கைப்பற்றியது. இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி தரப்பில் ஷபாலி வர்மா களமிறங்கியதன் மூலம் வரலாற்று சாதனை படைத்துள்ளார். மிக இளம் வயதில் 100-வது சர்வதேச போட்டியில் விளையாடிய வீராங்கனை எனும் வெஸ்ட் இண்டீஸின் ஷெமைன் காம்பெல்லின் சாதனையை ஷபாலி வர்மா முறியடித்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த ஷெமைன் காம்பெல் 21 வயது 18 நாள்களில் 100 சர்வதேச போட்டிகளில் விளையாடியதே சாதனையாக இருந்த நிலையில், அதனை தற்போது ஷபாலி வர்மா 20 வயது 102 நாள்களில் 100-வது சர்வதேச போட்டியில் பங்கேற்று புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

_____________________________________________________

சிறப்பு ஜெர்ஸியில் குஜராத் அணி

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன. இதையடுத்து இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் அகமதாபாத்தில் மோதின. 

இந்நிலையில் குஜராத் அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் வரும் 13ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியானது பிரத்யேக ஜெர்ஸியை அணிந்து விளையாடவுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியானது நீல இளஞ்சிவப்பு (லாவெண்டர்) நிறத்திலான ஜெர்ஸியை அணிந்து விளையாடவுள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறியவும் மற்றும் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த லாவெண்டர் நிற ஜெர்சியை அணிந்து விளையாடவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து